Super Star Pawan Kalyan About Sivakarthikeyan – Viral Videos
Thalapathy Vijay Political Poster Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
தளபதி விஜய் ரசிகர்கள் சமீப காலமாக தொடர்ந்து அரசியல் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியவாறு இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக அவரை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
1967-ல் அறிஞர் அண்ணா, 2021-ல் விஜய் அண்ணா – பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் போஸ்டர்.! இந்த போஸ்டரை பார்த்த விஜய் ரசிகர்கள் நீங்களே இப்படி பண்ணா எப்படி? என நொந்து கொண்டு வருகின்றனர்.
இதனை விஜய் ரசிகரான சென்னை ஈசிஆர் சரவணன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில் எம்.ஜி.ஆரின் மறு உருவமே மாஸ்டர் வாத்தியாரே தமிழகம் தலைமையேற்க.. 2021ல் உங்கள் வருகை கானும் தமிழகம் வாங்க தலைவா!
தேனி மாவட்ட இளைஞரணி தலைமை மக்கள் இயக்கம் என குறிப்பிட்டுள்ளார்.