Super Star Wishes

Super Star Wishes : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடைய ரசிகர்களுக்காக போயஸ் கார்டன் வீட்டின் வெளியே ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரு தினங்களுக்கு முன்னர் 2 பாயிண்ட் ஓ படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று காலை தன்னுடைய ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் கையசைத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்து கூறியது தொண்டர்களையும் ரசிகர்களையும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் உலகம் முழுவதும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2 பாயிண்ட் ஓ படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Super Star wishes

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.