Vijay and Rajini
விஜய்க்காக உருவான கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தவற விட்ட படங்கள் நிறைய உண்டு, அந்த படங்களில் வேறு நடித்து ஹிட்டான கதையெல்லாம் பல உண்டு.

அப்படி தான் விஜய்க்காக கெளதம் மேனன் உருவாக்கிய கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பு கொண்டு விட்டதாக ஒரு தகவல் கிளம்பியுள்ளது.

கெளதம் மேனன் விஜயை வைத்து யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை இயக்க இருந்தார், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியான பின்னர் விஜய் விலகி கொண்டதால் படம் ட்ராப்பானது.

தற்போது இந்த படத்தின் கதையை தூசி தட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம் கெளதம் மேனன்.

இதனால் ரஜினியின் அடுத்த பட விஜய்க்காக உருவான கதை தான் என தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? இல்லையா? என்பது கெளதம் மேனன் வாய் திறந்தால் தான் தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.