சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

Web Ads

சூர்யா 46 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Super information released about Suriya 46 movie.. An update that raises expectations..!
Super information released about Suriya 46 movie.. An update that raises expectations..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவலும் வெளியாகி உள்ளது.அதாவது இந்த படத்தில் பிளாஷ் பேக் போர்ஷனில் பாலிவுட் நடிகர் அணில் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Super information released about Suriya 46 movie.. An update that raises expectations..!
Super information released about Suriya 46 movie.. An update that raises expectations..!