ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சொல்லித் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தத் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கூலி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
