Super Good Film in Vijay
Super Good Film in Vijay

Super Good Film in Vijay – அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100-வது படத்தில் விஜய் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதுகுறித்து அந்நிறுவன தலைவர் ஆர்.பி.சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜீவா தற்போது பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “எங்கள் பேனரில் விஜய் நடிப்பது உறுதி. ஆனால் உடனடியாக நடக்குமா என்பது தெரியவில்லை.

ஒருவேளை அது எங்கள் நிறுவனத்தின் 100-வது படமாக இருந்தால் அது எங்களுக்குத்தான் கௌரவம்” என்றார்.