ஆதிரை நிச்சயத்தில் குணசேகரன் அதிர்ச்சி கொடுத்த நிலையில் ஜனனி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவில் ஆதிரை கலங்கியபடி நிற்க குணசேகரன் போய் அப்பத்தா கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வா, இல்லன்னா இந்த நிச்சயம் வேணா, கல்யாணமும் வேணா தூக்கி போட்டுட்டு வா என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைய சக்தி அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சு போச்சு என ஜனனியிடம் பேச ஜனனி இல்ல சக்தி இன்னும் எதுவும் முடியல நீ வா என சொல்லி உள்ளே அழைத்துச் செல்கிறார்.

இதனால் குணசேகரனுக்கு எதிராக நிச்சயத்தில் ஜனனி சம்பவம் செய்ய உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கப்போவது என்ன? ஜனனியின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்ற பரபரப்பான கதைக்களத்துடன் இன்றைய சீரியல் எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.