சுய ரூபத்தை காட்டிய குணசேகரன் எனக்கு ஆப்பு வைக்க அரசு ஐடியா கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். குணசேகரன் எல்லோரையும் ஏமாற்றி அப்பத்தாவிடம் இருந்து 40 சதவீத ஷேரை எழுதி வாங்கிய விஷயம் அனைவருக்கும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது குணசேகரனின் சுயரூபம் அனைவருக்கும் தெரிய வர அரசு குணசேகரனுக்கு முடிவு கட்ட தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக ஈஸ்வரி மற்றும் ஜனனியிடம் கூறுகிறார். இனிமேதான் அவனுக்கு நிறைய அடி இருக்கு நீங்க எல்லாரும் அவனால கஷ்டப்பட்டு இருக்கீங்களா உங்க எல்லாருக்கும் என்னால சொல்யூஷன் கிடைக்கப் போகுது என கூறுகிறார்.

அடுத்து ஆதிரை நிச்சயத்தில் நீங்க பண்ணது எல்லாமே டிராமா தான், அப்பத்தா கிட்ட இருந்து கையெழுத்து வாங்க தான் இப்படி இப்படி எல்லாம் பண்ணீங்களா என கேட்க குணசேகரன் ஏய் என நாக்கை கடித்து கொண்டு கோபப்படுகிறார். குணசேகரனின் நாடகத்தால் விசாலாட்சியும் அதிர்ச்சி அடைகிறார்‌. ‌‌