சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருக்கும் தளபதி விஜய்க்கும் இடையே வாய்த்தகராறு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sun Pictures Issues With Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தை முழுமையாக பார்த்ததாகவும் ஆனால் அந்த படம் திருப்தி அளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இதனால் KGF2 படத்துடன் மோதுவதற்கு பதிலாக இரண்டு வாரங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யலாமா என படக்குழு விஜயிடம் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தளபதி விஜய் ரிலீஸ் தேதியை மாற்றக் கூடாது என உறுதியாக சொல்லி விட்டாராம்.

இதனால்தான் திடீரென விஜய் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.