Sulur by Election
Sulur by Election

Sulur by Election – சென்னை: அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 18ம் தேதி தற்போது காலியாக உள்ள சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா?? என்ற கேள்வி தற்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் நேற்று முன்தினம் காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே தமிழகத்தில் தற்போது 21 தொகுதிகள் காலியாக உள்ளன.

இதில் 18 தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

அதிமுக பொருத்த வரையில், தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் கண்டிப்பாக 9 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ மரணம் அடைந்தது அக்கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கும் நேற்று மாலை கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் 21 தொகுதி மட்டுமின்றி, காலியாக உள்ள சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக அனைத்து கட்சியினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதியில் மட்டும் வழக்கு நடந்து வருவதாக காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது நாம் அறிந்ததே.