உண்மையில் சூர்யா ரொம்ப கோபக்காரர் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா.

Sudha Kongara About Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரை போற்று என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

ரியலா சூர்யா ரொம்ப கோபக்காரர்.. ஆனால்?? சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா ஓபன் டாக்

நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வெற்றி அடைந்தது. சூர்யா மாறன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு பிரபல யூடியூப் சேனல் சிறந்த இயக்குனருக்கான விருதை வழங்கியது.

இந்த நிகழ்ச்சியை சுதா கொங்கரா பேசியபோது சூர்யாவை எனக்கு 20 வருடம் எனக்கு தெரியும். சூர்யா மிகவும் கோபக்காரர். ஆனால் படப்பிடிப்பு தளங்களில் அப்படி இருக்கமாட்டார், மிகவும் அமைதியாக இருப்பார். இவருடைய ரியல் கோபத்தை தான் மாறன் கதாபாத்திரத்தில் மடை மாற்றியுள்ளார் என பேசியுள்ளார்.

ரியலா சூர்யா ரொம்ப கோபக்காரர்.. ஆனால்?? சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா ஓபன் டாக்