தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘பத்து தல’ திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக STR 48 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்க இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், STR 48 திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக இருக்கும் என்றும் அனைத்து வயதினருக்கும் இப்படம் பிடிக்கும் வகையில் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.