விவேக்கிற்காக நாம் செய்ய வேண்டியது இது தான் என நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
STR Condolences to Vivekh : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விவேக். பத்மஸ்ரீ விருது பெற்றவர் . சமூகத்திற்காகவும் அப்துல் கலாம் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகமெங்கும் 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்.
இவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவேக் மனைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விவேக் அவர்கள் எப்போதும் எனக்கு ஊக்கம் அளிப்பார். என்னுடைய செயல்பாடுகளை விசாரித்து கொண்டே இருப்பார்.
அவருக்காக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் அவர் செய்து வந்த செயல்பாடுகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.