லியோ படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக உள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது படத்தின் கதை குறித்த தகவல் என்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனது தம்பியின் கொலையால் விஜய் கேங்ஸ்டராக மாறுகிறார் என தகவல் பரவிய நிலையில் தற்போது வேறு ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கைதி, விக்ரம் படங்களைப் போன்று இந்த படத்தையும் லோகேஷ் போதை பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது சர்வதேச அளவிலான போதை கடத்தலை பற்றிய படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.