Stalin meet Vijayakanth
Stalin meet Vijayakanth

Stalin meet Vijayakanth – சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று அவரது வீட்டில் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் களம் தற்போது பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

அதுமட்டுமின்றி, அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்பது பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினி, காங்கிரசின் திருநாவுக்கரசர என்று ஒவ்வொருவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை படையெடுத்து வருகிறார்கள்.

இருப்பினும் இந்த சந்திப்பில், அரசியல் ஏதும் இல்லை, உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்தோம் என்கிறார்கள். எனினும் தேமுதிகவை தன்பக்கம் இழுக்க முயன்று வருவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், இன்று விஜயகாந்த் வீட்டுக்கு வருகை தந்தார். அங்கு விஜயகாந்த்தை அவர் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

விஜயகாந்த்-ஸ்டாலின் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் நேரிடையாகவே விஜயகாந்த் வீட்டுக்கே சென்றிருப்பதால், கூட்டணி குறித்த விஷயமாக இருக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

இருப்பினும் அவர்களிடத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பினால், இதில் அரசியல் இல்லை, உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்தோம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here