Srilanka Terror Attack
Srilanka Terror Attack

Srilanka Terror Attack :

கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால், கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் படிப்படியாக தணிந்து வருகிறது.

மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கடந்த 21-ம் தேதி அன்று, ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள்,

நட்சத்திர விடுதிகள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனால் கடந்த ஒருவாரமாக இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என அதிபர் சிறிசேனா குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் இலங்கை காவல்துறை தலைவர் பூஜித்த ஜெயசுந்தரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இலங்கையின் புதிய காவல்துறை (பொறுப்பு) தலைவராக மூத்த அதிகாரி சி.டி.விக்ரமரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதோடு இலங்கையில் தற்போது பதற்றம் தணிந்து வருகிறது. மேலும் கடந்த ஒருவாரமாக அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு தளர்த்தப்பட்டது.எனவே மக்கள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால், கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் படிப்படியாக தணிந்து வருகிறது.

மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கடந்த 21-ம் தேதி அன்று, ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனால் கடந்த ஒருவாரமாக இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என அதிபர் சிறிசேனா குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் இலங்கை காவல்துறை தலைவர் பூஜித்த ஜெயசுந்தரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இலங்கையின் புதிய காவல்துறை (பொறுப்பு) தலைவராக மூத்த அதிகாரி சி.டி.விக்ரமரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதோடு இலங்கையில் தற்போது பதற்றம் தணிந்து வருகிறது. மேலும் கடந்த ஒருவாரமாக அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு தளர்த்தப்பட்டது.எனவே மக்கள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.