SP Arjun Saravanan About Valimai

வலிமை மோஷன் போஸ்டரை வைத்து சூப்பரான விஷயம் ஒன்றை செய்துள்ளார் சென்னை எஸ் பி.

SP Arjun Saravanan About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மோஷன் போஸ்டர் யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையை பெற்றுள்ளது.

மீண்டும் ஜெயித்திட ஒன்றுபட்டு ஆடுவோம் : இளம் வீராங்கனை ஷபாலி வர்மா உறுதி

தற்போது இந்த மோஷன் போஸ்டரில் தல அஜித் ஹெல்மெட் உடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து சென்னையை சேர்ந்த எஸ் பி அர்ஜுன் சரவணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு தலை கவசம் உயிர் கவசம் என குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Olympics 2021 வீரர்களுக்கு A.R.Rahman-ன் புதிய Motivational Song | Hindustani Way | AnanyaBirla | HD