சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

Web Ads

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #சூரி07 / #மைத்ரிதமிழ்03 என அழைக்கப்படும் இப்படத்திற்கு “Blood Followed The Flood” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். பல மொழிகளில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை உருவாக்கி வரும் மைத்ரி நிறுவனம், தமிழில் தனது மூன்றாவது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்குகிறது.

படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளநீரில் நிற்கும் கதாநாயகனின் பின்புறக் காட்சி, நீரில் பிரதிபலிக்கும் உருவம், கையில் இருக்கும் ஆயுதம் ஆகியவை மர்மம் மற்றும் பதற்றம் நிறைந்த கதையை குறிக்கின்றன. சுற்றிலும் சிதறிய பொருட்கள் மற்றும் சிவப்பு ஒளி, பேரழிவு பின்னணியையும் வன்முறையையும் சுட்டிக்காட்டுகின்றன.

“BLOOD FOLLOWED THE FLOOD” என்ற டேக்லைன், படத்தின் தீவிரத்தையும் survival தளத்தையும் வெளிப்படுத்துகிறது.

‘கொட்டுக்காளி’, ‘விடுதலை’, ‘மாமன்’ போன்ற படங்களுக்குப் பிறகு சூரி ஹீரோவாக தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை இயக்கிய ஆர். ரவிகுமார் இந்தப் படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது. மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன் தமிழில் ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ போன்ற படங்களை தயாரித்துள்ளது.

இந்த புதிய கூட்டணியும், வித்தியாசமான போஸ்டர் வெளியீடும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.