Snehan Reception Photos

பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆகியோர் பங்கேற்ற சினேகனின் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Snehan Reception Photos : தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருப்பவர் சினேகன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அரசியல் சதுரங்கம் : உள்ளாட்சித் தேர்தலில், திமுகவுடன் தேமுதிக கூட்டணி..

இவருக்கு சமீபத்தில் கன்னிகா ரவி என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க இவர்களின் திருமணம் கோலாகலமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடந்தேறியது. இதனையடுத்து இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர்.

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான சக்தியும் பங்கேற்றுள்ளார். இவர் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

httpsஆரம்ப காலத்தில் ஹோட்டலில் Bathroom கழுவினேன்! – MR World பட்டம் வென்ற Manikandan Emotional Speech