படப்பிடிப்பு தளத்திலிருந்து வாழ்த்து தெரிவித்துள்ள எஸ் கே 21 படக்குழுவினரின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் “எஸ் கே 21” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்து வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சிவகார்த்திகேயன் பேசும் வீடியோ ஒன்றை SK21 படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.