Pushpa 2

SK 23 படம் குறித்து வெளியான தரமான அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.கே 23 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

sk 23 movie latest update viral
sk 23 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் மிரட்டி வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் விக்ராந்த் ,சபீர், பிஜுமேனன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

sk 23 movie latest update viral
sk 23 movie latest update viral