ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆகி இருக்கக் கூடாது என பேசி உள்ளார் எஸ் ஜே சூர்யா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய தந்தையின் மூலமாக திரையுலகில் நுழைந்த இவர் பழைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து தன்னுடைய விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகராக தடம் பதித்துள்ளார்.

இந்த நிலையில் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் எஸ் ஜே சூர்யா சஞ்சய் பற்றி பேசியுள்ளார்.

அதாவது ஜேசன் சஞ்சய் ஹீரோவாக என்றுதான் நான் எதிர்பார்த்தேன். இயக்குனர் ஆவார் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. இப்போது அவர் இயக்குனராக அறிமுகமானாலும் எதிர்காலத்தில் அமீர்கான் போல ஹீரோவாக தடம் பதிப்பார் என நம்புவதாக கூறியுள்ளார்.