Siva

Sivakarthikeyen Next Movie : சர்கார் பட பாணியில் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள அடுத்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கான பூஜையும் சமீபத்தில் நடந்தது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன் தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் இன்று முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் என்பதையும் தாண்டி பாடகராவும் தயாரிப்பாளராகவும் கனா மூலம் படத்தில் தன்னுடைய புதிய திறமைகளை வெளி கொண்டு வந்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவி தொகுப்பாளராக ரியோ ராஜை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தை பிரபல யூ ட்யூப் சேனலான பிளாக் ஷீப் அண்ட் டீம் இயக்க உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த சர்கார் படத்தில் அரசியல்வாதியான பழ.கருப்பையா நடித்திருந்ததை போல் இப்படத்தில் நாஞ்சில் சம்பத் அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

நாஞ்சில் சம்பத் அவர்கள் ஏற்கனவே ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள எல்.கே.ஜி என்ற படத்தில் நடித்துள்ளார்.

அந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Next

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.