ரஜினிகாந்த் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், மாவீரன் திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் கடந்தும் படத்தை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு போன் செய்து மாவீரன் படகுழுவினர் அனைவரையும் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் நாளை நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு வாழ்த்துக் கூறிய சிவகார்த்திகேயன் இது நிச்சயம் தலைவரின் மற்றொரு பிரம்மாண்ட திரைப்படமாக இருக்கும் என்று குறிப்பிட்டு தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் எனக் கூறி ஜெயலர் படகுழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோ பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.