Siva Ang VJ

சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் எந்நேரமும் பிஸியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25-வது படமாகும். குறைந்த காலகட்டத்தில் 25 படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் சேதுபதி 25 என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோபிநாத் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் நேற்று நடந்துள்ளது. அப்போது ஒரு செக்மென்ட்டில் விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு வாழ்த்து சொல்லவே சிவா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளனர்.

vj and siva

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.