அயலான் படம் குறித்து சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சாந்தி டாகிஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் விஜய் சேதுபதியும் தனது குரல் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். கடந்த வாரம் 14 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நன்றி தெரிவிக்கும் விழாவில் உரையாடிய சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘அயலான்’ திரைப்படம் குறித்தும் கூறியுள்ள தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர், மாவீரனைப் போலவே அயலனும் மிகவும் புதிய கதைக்களமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். மேலும் இது ரசிகர்களுக்கும் எனக்கும் மிகவும் புதியதாக இருக்கும் என்றும் ஆனால் இது நல்லதா இல்லையா என்பதை பார்வையாளர்கள் தீர்மானிக்க வேண்டும். என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு அயலான் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இப்படத்திற்கான இசையில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.