ஒரே செட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினியை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயனின் த்ரோ பேக் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மாவீரன் கெட்டப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் ரஜினியை சந்தித்திருக்கும் புகைப்படம் இன்னும் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அதே செட்டில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருந்த சமயத்தில் ரஜினியை மாவீரன் கெட்டப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த த்ரோ பேக் புகைப்படம் தற்போது இணையத்தில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது.