பீஸ்ட் விஜய்க்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan in Lyrics for Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்திற்கு நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். மற்றும் பல நடிகர் நடிகைகள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடல் ஒன்று இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

கொரோனா 3-வது அலையை தடுக்க, தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு.?

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தளபதி விஜய் இன்ட்ரோ பாடலை எழுதியுள்ளார் என விக்கிபீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மனதில் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் Aishwarya Rajesh உடன் நடிக்கும் பிரபுதேவா – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு | HD

ஆனால் விக்கிபீடியா பக்கத்தில் யார் வேணாலும் எந்த தகவலும் என்றாலும் மாற்றி எழுதலாம் என்பதால் இது எந்த அளவிற்கு உண்மை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் எதுவும் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.