Pushpa 2

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. போட்டோஸ் இதோ..!

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan and son celebrate christmas
sivakarthikeyan and son celebrate christmas

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்.கே25 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டும் மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இரண்டாவது மகனான குகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குகன் இவ்வளவு வளர்ந்துட்டாரா என்று கேட்டு வருகின்றனர்.