‘லிட்டில் ராக்ஸ்டார்’ குகனுக்கு வாழ்த்துகள்: சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியர் மகிழ்ச்சி..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ‘ஜனநாயகன்’ படத்துடன் களம் இறங்குகிறது.
மேலும், வெங்கட் பிரபு மற்றும் ‘குட் நைட்’ பட இயக்குனர் விநாயக் ஆகியோரின் இயக்கத்தில் படமென சிவகார்த்திகேயன் மாஸாக உலா வருகிறார்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய மகன் குகன் தாஸின் பிறந்தநாளை பேமிலியோடு கொண்டாடி இருக்கிறார். மகனோடு சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆர்த்தி- சிவகார்த்திகேயன் தம்பதியர் ‘எங்கள் லிட்டில் ராக்ஸ்டார் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயனுக்கு மொத்தம் 3 பிள்ளைகள், ஆராதனா, குகன் தாஸ், பவன் ஆவர். இதில் ஆராதனா சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தில் தனது முதல் பாடலை பாடியிருந்தார்.
