கோடிக்கணக்கில் வசூலை அள்ளி குவித்து வரும் துல்கர் சல்மானின் சீதாராமம் திரைப்படத்தின் தகவல் வைரலாகி வருகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டி அவர்களின் மகன் தான் துல்கர் சல்மான். பிரபல மலையாள நடிகர் ஆன இவர் தமிழில் "வாயை மூடி பேசவும்", "ஓ காதல் கண்மணி" போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் "சீதா ராமம்". இதில் இவருக்கு ஜோடியாக மீறுநாள் தாகூர் நடித்துள்ளார்.

கோடிக்கணக்கில் வசூலை அள்ளி குவிக்கும் துல்கர் சல்மானின் சீதாராமம் திரைப்படம் - வைரலாகும் புதிய தகவல்.

மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களாக ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். சப்னா சினிமா தயாரித்துள்ள இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இப்படம் இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையை மையமாகக் கொண்ட எடுக்கப்பட்டிருந்தது.

கோடிக்கணக்கில் வசூலை அள்ளி குவிக்கும் துல்கர் சல்மானின் சீதாராமம் திரைப்படம் - வைரலாகும் புதிய தகவல்.

தேசப்பற்று, காதல் என இரண்டையும் அற்புதமாக சொல்லியுள்ளார் இயக்குனர். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்துடன் இணைந்து வெளியான அதர்வாவின் குருதியாட்டம் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்ததால் பெரும்பாலான ரசிகர்கள் சீதாராமம் படத்தை பார்க்க விரும்புகின்றனர். இந்நிலையில் நேற்றுடன் படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் கிட்டதட்ட 10 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

கோடிக்கணக்கில் வசூலை அள்ளி குவிக்கும் துல்கர் சல்மானின் சீதாராமம் திரைப்படம் - வைரலாகும் புதிய தகவல்.

இரண்டாவது நாளே படத்தின் வசூல் இரண்டு மடங்கு வசூல் அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் குறித்த பாசிட்டிவான கருத்துக்கள் ரசிகர்களிடம் அதிகரித்து வருவதால் இப்படத்தின் வசூல் இன்னும் சில தினங்களில் அதிக அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தபடம் துல்கர் சல்மானுக்கு பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.