
வேலை கிடைக்காமல் முத்து தவிக்க மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார் விஜயா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து வேலை தேடி செல்ல ஒரு கார் டிராவல்ஸ் உரிமையாளர் அந்த பைனான்சியரை பகைச்சிட்டு உனக்கு வேலை கொடுக்க முடியாது இங்க மட்டும் இல்ல எங்கேயும் உனக்கு வேலை கிடைக்காது என சொல்கிறார்.

இதனால் முத்து இங்கிருந்து எழுந்து வர இங்கே விஜயா மளிகை பொருட்களை வீட்டுக்கு எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன். முத்து பணம் கொடுத்தானா என்று மீனாவிடம் கேட்கிறார். இன்னைக்கு கொடுக்கிறதா சொன்னா இன்னும் கொடுக்கல என்ன ஆச்சு உனக்கும் சேர்த்து அவன் தானே கொடுக்கிறான். பணம் கொடுத்தா தானே மூணு வேலையும் நல்லா கொட்டிக்க முடியும் என அவமானப்படுத்தி பேச மீனா நான் போய் பணத்தை வாங்கிட்டு வரேன் என்று சொல்லி வீட்டில் இருந்து கிளம்பி வருகிறார்.

முத்து வர வழியில் தெரிந்த ஒருவரை பார்க்க அவர் கார் துடைக்க ஆள் யாராவது இருந்தா சொல்லுப்பா ஒரு காருக்கு 2000 தினமும் 20 கார் துடைக்கணும் என சொல்கிறார். முத்து நான் வரேன் என்று சொல்லி அந்த வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.
அடகு வைக்க வர அங்கு கடை மூடப்பட்டு இருப்பதை பார்த்து தம்பி சத்யாவுக்கு போன் போட்டு வரச்சொல்லி வளையலை கொடுத்து இதை வச்சு வட்டி போக பத்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வர சொல்கிறார். சத்யா அதற்கு கொண்டு போய் சிட்டியிடம் கொடுத்து பணம் கேட்க அவன் வளையல் எல்லாம் வேண்டாம். அதை நீயே வச்சுக்க போய் அக்கா கிட்ட பணத்தை கொடு என பணத்தை கொடுத்து அனுப்புகிறான்.

பிறகு இங்கே முத்து கார் துடைக்க தொடங்க அங்கே சத்யா பணத்தை கொண்டு போய் கொடுக்க மீனா ரசீது கேட்க அது என்கிட்ட தான் இருக்கு வேணுமா என்று சத்யா கேட்டதும் இல்ல வேண்டாம் நீயே வச்சுக்க நீ தானே மீட்க போற என சொல்லி விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.