விஜயா வழுக்கி விழ முத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி விஜயா வீட்டில் தன்னுடைய அம்மாவும் கிருஷ் வந்திருந்ததை சொல்லி பயந்து நடுங்குகிறார்.
இதனால் அவரது தோல்வி நீ மனோஜ் கூட்டிட்டு தனி குடுத்தனம் வந்தது என்று சொல்ல இல்ல எனக்கு கூட்டு குடும்பமா வாழத்தான் ஆசையா இருக்கு என்று சொல்கிறார். இன்னும் கல்யாணத்துக்கு ரெண்டு மூணு நாள் தான் இருக்கு எல்லாத்தையும் பாத்துட்டோம் இதையும் பார்த்ததெல்லாம் என்று தோழி ஆறுதல் சொல்கிறார்.
அடுத்ததாக வீட்டில் பாட்டி முத்து வேலைக்கு கிளம்ப பாட்டி சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சிருக்கு போகாதே என்று சொல்ல அது நைட்டு தானே அதுக்குள்ள ஒரு ரெண்டு மூணு சவாரி போய்ட்டு வந்துறேன் என சொல்லி கிளம்புகிறார். அதனைத் தொடர்ந்து விஜயா இப்போதைக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு என்ன அவசரம் மனோஜ்க்கு எல்லாம் முறையா நடந்து முடியட்டும் அதுக்கப்புறம் இது உங்களுக்கு நடத்திக்கலாம் என்று சொல்ல பாட்டி இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆக வேண்டும் என உறுதியாக சொல்லி விடுகிறார்.
அதன் பிறகு மீனா டைனிங் டேபிளை தொடைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் விஜயா ஒரு பக்கெட் தண்ணி எடுத்து வந்து வீடு முழுக்கையும் கழுவி தள்ளு என்று சொல்கிறார். பிறகு மீனா வீட்டை கழுவி தள்ள அங்கு வரும் விஜயா உன் அம்மா அந்த பூ கட்டுற கும்பல் எல்லாரும் வந்துட்டு போனதுக்கு நாள் தான் வீட்டை கழுவ சொன்னேன் என்று சொல்லி மீனாவை கலங்க வைக்கிறார்.
மீனா கண்கலங்கி கொண்டிருக்கும் நேரம் பார்த்து என்னாச்சு என்று கேட்க மீனா ஒன்றுமில்லை என சொல்லி சமாளிக்க முத்து திரும்பத் திரும்ப கேட்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மீனா என் குடும்பம் இந்த வீட்டுக்கு வந்துட்டு போனதுனால வீட்டை கழுவி தள்ள சொன்னாங்க போதுமா என்று சொல்ல முத்து அவங்கள சும்மா விட கூடாது என கோபப்பட்டு சண்டைக்கு போகிறார்.
ஆனால் மீனா முத்துவை தடுத்து ரூமுக்குள் அழைத்துச் சென்று சமாதானம் செய்து கொண்டிருக்கும் நேரம் பார்த்து அண்ணாமலை வீட்டிற்கு வந்து விஜயாவை கூப்பிட அவர் எனக்கு வேற வேலை இல்லையா நான் உங்களுக்கு இதெல்லாம் ஏற்பாடு பண்ணனுமா என்று சொல்லி கொண்டே நடந்து வர முத்து எட்டி உடைத்து கொட்டிய தண்ணீரில் கால் வைத்து வழுக்கி கீழே விழுகிறார்.
இதனால் வீட்டில் எல்லோரும் பதற பாட்டி சாந்தி முகூர்த்தத்தை தடுத்து நிறுத்த நடிக்கிறியா என கேட்கிறார். மேலும் வெள்ளிக்கிழமை அதுவுமா விளக்கு வச்ச பிறகு வீட்டை யார் கழுவித்தால சொன்னது என்று கேட்க முத்து அவர்கள் தான், நாம் ஒரு வினை விதைச்சா அது நமக்கே திரும்பி வரும் என்று சொல்வார்களே அதுதான் வந்திருக்கு என சொல்லி விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ரோகினிக்கு போன் செய்யும் பிஏ உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு அவன் பேரு கிரிஷ் என்ற உண்மைகளை உடைக்க அவர் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.