போன் அடித்து போலீசில் சிக்கி உள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு மீனாவும் விஜயாவும் சேர்ந்து ஆர்த்தி எடுக்கின்றனர். பிறகு விஜயா மீனாவிடம் ஆர்த்தியை எடுத்துட்டு போய் ரோட்டில் கொட்டிட்டு வா என்று அதிகாரமாக சொல்ல பாட்டி எல்லாத்தையும் நீ செய்யணும் தானே ஆசைப்பட்ட நீ எடுத்துட்டு போய் கொட்டிட்டு வா என தட்டை விஜயாவிடம் கொடுக்க சொல்ல மீனாவும் கொடுக்க விஜயா அவமானப்பட்டு நிற்கிறார்.

அடுத்து இருவரும் மேலே வந்து வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருக்க முத்து மனோஜை இடித்து தள்ளி விட்டு வீட்டுக்குள் வருகிறார். மனோஜ் தள்ளிட்டு போற என்று திட்ட என்னமோ பத்தடுக்கு மாடியில் இருந்து தள்ளுன மாதிரி பேசுற உன் உடம்புல அவ்வளவுதான் வலுவு இருக்கு என்று நக்கல் அடிக்கிறார்.

பிறகு இருவரையும் உள்ளே அழைத்து வந்து விஜயா விளக்கு ஏற்ற சொல்லி ரோகினியிடம் நீ வந்து விளக்கேத்துற நேரம் இந்த வீடு பிரகாசமா இருக்கணும் என்று சொல்ல அப்படின்னா வெக்கப் போர் எடுத்து வந்து தான் கொளுத்தி விடணும் என முத்து நக்கல் அடிக்கிறார்.

பிறகு விளக்கேத்தி முடித்து இருவருக்கும் பாலும் பழமும் கொடுக்க போலீஸ் வீட்டுக்குள் வந்து நிற்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்துமிடம் பிஏ போட்டோவை காட்டி இந்த ஆளு உங்களுக்கு தெரியுமா? உங்க கார்ல தான் வந்தானா? என்று கேட்க ஆமா என் கார்ல தான் வந்தான், பொண்ணுங்கள பத்தி தப்பு தப்பா பேசினா அதனால்தான் அடிச்சு ஓடவிட்டேன் என்று சொல்கிறார்.

இந்த ஆள் அடிபட்டு கோமா ஸ்டேஜில் இருப்பதாக சொல்ல ரோகினி சந்தோஷப்படுகிறார். விசாரணைக்கு ஏதாவது கூப்பிட்டா ஸ்டேஷனுக்கு வர மாதிரி இருக்கும் என்று சொல்லிவிட்டு போலீஸ் கிளம்ப தயாராக அப்போது கான்ஸ்டபிள் போனுக்கு அந்த நபர் கடைசியாக போன் செய்த நம்பர் வருகிறது.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த நம்பருக்கு போன் செய்ய சொல்ல ரோகிணியின் போன் அடிக்க கான்ஸ்டபிள் இந்த பொண்ணோட நம்பர் தான் அது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு போட்டோவை காட்டி இவன உங்களுக்கு தெரியுமா என்று கேட்க தெரியாது என்று சொல்லும் ரோகிணி எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு ஒரு போன் வந்தது, எனக்கு கல்யாணம் அதனால அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க முடியாது என்று சொல்லிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து போன் வந்துட்டே இருந்தது நான் கட் பண்ணிட்டேன் என்று சமாளிக்கிறார்.

பிறகு போலீஸ் கிளம்பி சென்ற பிறகு முத்து எங்கேயோ இடிக்குதே என்று சொல்லி சந்தேகப்பட ரோகிணி ஷாக்காகி நிற்க வித்யா எதையோ சொல்லி சமாளிக்கிறார். பிறகு ரூமுக்குள் சென்று ரோகிணி பதற்றமாக இருக்க வித்யா நான் ஹாஸ்பிடல் போய் என்ன ஆச்சுன்னு பாத்துட்டு உனக்கு சொல்றேன் நீ பயப்படாம இரு என கிளம்பி செல்கிறார்.

அடுத்து ரவியும் ரெஸ்டாரன்ட் கிளம்பி விட ஸ்ருதி போன் போட்டு பசிக்குது இன்னைக்கு உன்னுடைய சாப்பாடு சாப்பிட முடியாது, நீ உன் அண்ணன் கல்யாணத்துல இருப்ப என்று சொல்லி கேட்க நான் ரெஸ்டாரன்ட் வந்துட்டேன் சமைத்து அனுப்புறேன் என்று சொல்ல இல்லை இன்னைக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சிடுச்சு நானே வரேன்னு சொல்லி ஸ்ருதி ஃபோனை வைக்கிறார்.

அடுத்ததாக ரோகிணி ரூமுக்குள் இருக்க வித்யா போன் செய்ய என்ன மேரேஜ் லைப் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கியா என்று கேட்க நானே நெருப்பு மேல நின்னுகிட்டு இருக்கா மாதிரி இருக்கேன் என்று புலம்புகிறார். பிறகு வித்யா அவன் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டான் இப்போதைக்கு கண் முழிக்க வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் சொல்றாரு, அதனால நீ கவலைப்படாம சந்தோஷமா உன்னுடைய அடுத்த இன்னிங்ஸை என்ஜாய் பண்ணு என்று சொல்கிறார்.

இதனால் ரோகிணி சந்தோஷப்பட்டு வெளியே ஓடிவந்து ஆன்ட்டி என விஜயாவை கட்டிக் கொள்ள எல்லோரும் புரியாமல் முழிக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.