மனோஜிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்துள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரூமில் அப்செட்டாக இருக்கும் ரோகினி மனோஜிடம் எல்லா உண்மையும் சொல்லிட போகிறேன் என ஃபோன் செய்து பேச மனோஜ் ரோகிணி பேசுவதை கேட்காமல் ரொமான்ஸ் என்ற பெயரில் மொக்க போடுகிறார்.

திடீரென விஜயா முகூர்த்த புடவை நகையெல்லாம் எடுத்துக்கொண்டு பார்வதியுடன் ரூம் கதவைத் தட்ட வேறு எதுவும் பேச முடியாமல் போனை வைத்து விடுகிறார் ரோகிணி. ரூமுக்குள் வந்த விஜயா புடவையை கொடுத்து சீக்கிரம் கட்டிக்கிட்டு வந்துடு என்று சொல்ல ரோகிணி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்.

அடுத்ததாக விஜயா கோலம் போடத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அப்போது வந்த உறவினர்கள் சிலர் இந்த கல்யாணமாவது நடக்குமா மனோஜ் இருக்கானா இல்லையா என கேட்டு விஜயாவை நக்கல் அடிக்கின்றனர். பிறகு மீனா வந்து கோலம் போட ஐயர் மீனாவை பாராட்ட விஜயா கடுப்பாகிறார். அண்ணாமலை முத்துவுக்கு போன் போட்டு சீக்கிரம் வர சொல்லு என்று சொல்ல மீனா போன் போட்டு வர சொல்ல முத்துவும் வந்து விடுகிறேன் முதல்ல சவாரி தான் முக்கியம் என்று கூறுகிறார்.

கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் முத்துவுக்கு போன் போடும் மீனா நம்ப சைடுல இருந்து ஏதாவது செய்யணும் என்று சொல்ல முத்து அதெல்லாம் அவனுக்கு ஒன்னும் செய்ய வேண்டாம், யார் என்ன கேட்டாலும் நான் பார்த்துக்கிறேன் என சொல்லி போனை வைக்கிறார்.

பிறகு விஜயா தன்னுடைய தோழி வித்யாவிடம் நீ போய் மனோஜை கூட்டிட்டு வா அவன்கிட்ட எல்லா உண்மையும் சொன்ன பிறகுதான் இந்த கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன், இந்த கல்யாணம் நடக்கணுமா வேண்டாமா என்பதை மனோஜ் முடிவு பண்ணட்டும் என சொல்கிறார். இதனால் வித்யா மனோஜ் ரூமுக்கு வந்து அவரிடம் ரோகிணி உங்ககிட்ட ஏதோ பேசணும்னு சொல்லி வர சொன்னா என்று சொல்ல அந்த சமயம் பார்த்து விஜயா அங்கு வந்து விடுகிறார்.

நீ எதுக்கு இப்ப இங்க வந்து மனோஜ் கிட்ட பேசிட்டு இருக்க? ரோகிணிக்கு தான நீ பிரிண்ட் போ அவளை போய் ரெடி பண்ணு என சொல்லி துரத்தி விடுகிறார். இன்னொரு பக்கம் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருக்கும் போது சீதா நீ பூ கட்ட கத்துக்கோ அப்பதான் உன் மனைவிக்கு கட்டித் தர முடியும் என சொல்ல அதான் நீ இருக்கியே என்று கூறுகிறார். அடுத்து கரும்பு ஜூஸில் துளசி போட்டு குடிச்சா சூப்பரா இருக்கும் என ரவி சொல்லி நீயும் கத்துக்க என்று சீதாவிடம் சொல்ல அவர் அதான் நீ இருக்கியே என்று சொல்ல இது எல்லாம் கேட்டு சீதாவின் அம்மா பதட்டம் அடைகிறார்.

பிறகு சீதாவை கூப்பிட்டு சும்மா சும்மா அந்த தம்பி கிட்ட பேசிட்டு இருக்காத மீனாவோட மாமியார் பார்த்தா என்ன ஆகும் என கோபப்பட சீதா நீ உள்ள போ மா, நானும் ரவியும் மாலை கட்டிக்கொண்டு வரோம் என அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் ரோகிணி மனோஜ்க்கு போன் போட்டு எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு என்று விஷயத்தை சொல்ல மனோஜ் போனை கட் பண்ணி விடுகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் கலங்கி நிற்கிறார்.