
பாரில் நடந்த சம்பவத்தால் மீனாவை தேடி கிளம்பியுள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஹோட்டலுக்கு வந்த முத்து ரவியை போட்டு அடி விழுத்த எடுத்து இனி அண்ணாமலைக்கு 2 பசங்க தான் மூணாவதாக இருந்தால் இனி அவன் கிடையாது என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். மேலும் வீட்டு பக்கம் வந்துடாத பொண்ணு போட்டு விடுவேன் எனவும் எச்சரிக்கிறார்.

அதன் பிறகு ரவி இருட்டில் வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்க சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்த ஸ்ருதி என்ன ஆச்சு இருட்ல உட்கார்ந்து இருக்க என்று கேட்க ரவி அமைதியாகவே இருக்க பிறகு ரவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இதனை தொடர்ந்து ரவியின் நண்பன் மூலமாக முத்து அவரை அடித்த விஷயம் ஸ்ருதிக்கு தெரிய வர இன்னொரு முறை அவர் உன் மேல கை வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன் போலீஸ்ல கம்ப்ளைன்ட் விடுவேன் என கூறுகிறார். இங்கே முத்து சரக்கு அடிக்க வந்த இடத்தில் ஒருவர் என் பொண்டாட்டிய நான்கு வார்த்தை திட்டுனேன். பேன்ல தூக்கு மாட்டிகிட்டு செத்துப்போயிட்டா, யாரும் பொண்டாட்டி கிட்ட சண்டை போடாதீங்க என்று கூறுகிறார்.

இதைக் கேட்டதும் முத்து அங்கிருந்து செல்வத்தைக் கூட்டிக்கொண்டு கிளம்பி விட காதில் வரும்போது அந்த நபர் சொன்ன விஷயங்கள் முத்துக்கு நினைவுக்கு வந்து கொண்டே இருக்க மீனாவுக்கு என்னாச்சு எனக்கு தெரியாமல் பதறுகிறார். செல்வத்திடம் மீனாவுக்கு போன் போட்டு முத்து இருக்கானா கேளு அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் என்று சொல்ல செல்வமும் போன் போட்டு முத்து இருக்கானா என்று கேட்க மீனா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க முத்து எதுவும் பேச மாட்டாங்கப்பா என உளறி விட முத்து தான் போன் பண்ண சொல்லி இருக்காரு என்பதை மீனா புரிந்து கொள்கிறார். பிறகு மீனா போனை கட் செய்துவிட முத்து காரை நேரா விடு என சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.