விஜயா கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்துள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலைக்கு சேர வேண்டிய மொத்த பென்ஷன் பணத்தையும் மொத்தமாக கொடுக்க வேண்டும் எனவும் இதுவரை அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து உயர் அதிகாரி கோபமாக வீட்டுக்கு வந்து கேஸில் தோற்று அவமானப்பட்டு நின்றதாகவும் சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வந்து விட்டதாக தனது மனைவியிடம் சொல்லி எல்லாம் உன்னால் வந்தது என்று ஆவேசப்படுகிறார். அந்த அண்ணாமலையை சும்மா விடக்கூடாது என்று திரும்பவும் இவர் ஆவேசப்பட உயர் அதிகாரி அதெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்லை என்று திட்டி அடக்குகிறார்.

அதைத்தொடர்ந்து ரோகிணி இங்கே பார்லருக்கு போகாமல் லேட்டாக எழுந்து வர விஜயா பார்லருக்கு போகலையா என்று கேட்க இன்னைக்கு பெருசா அப்பாயிண்ட்மெண்ட் இல்ல அதனால அங்க இருப்பவர்களே பார்த்துப்பாங்க என்று சொல்கிறார். உடனே விஜயா அப்படி எல்லாம் போகாம இருக்கக் கூடாது யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பாதே உனக்கு ஏதாச்சும் கஷ்டமா இருந்தா சொல்லு நானே வந்து கல்லா பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று முழுக்க முழுக்க பணத்தை பற்றி பேசுகிறார். கந்துவட்டி காரனுக்கு அடுத்த மாசம் வட்டியை சீக்கிரம் கொடுத்துடனும் என்று சொல்லி பேசி முடித்துவிட்டு ரோகினி உனக்கு கல்யாண நீ யாரையாவது தெரியுமா என்று கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

எனக்கு அப்படி யாருன்னு தெரியாது என்று சொல்லி சமாளிக்க இல்ல உனக்கு ஒரு போன் வந்தது யாரோ ஒருத்தங்க கல்யாணம்னு சொல்லிட்டாங்க அப்புறம் ராங் நம்பர்னு அவங்களே போன வச்சுட்டாங்க என்று சொல்ல ரோகிணி ரூமுக்கு வந்து தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு எனக்கு எதுக்கு போன் பண்ண நான் தான் உன்னை போன் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல என்று ஆவேச பட அவர் ரோட்டில் மயங்கி விழுந்த விஷயத்தை சொல்கிறார். பிறகு கல்யாணி சரி நான் ஊருக்கு வரேன் போய் டாக்டர் பார்க்கலாம் என்று சொல்லி போனை வைக்கிறார்.

இங்கே ஸ்ருதி ரவியுடன் வீட்டுக்கு வர ரவி அவருடைய அப்பாவிடம் என உங்களுக்கு ஞாபகம் இல்லையா நான் அண்ணாமலையோட பையன் என்று சொல்ல ரவி கிளம்பி ஏதும் ஸ்ருதியிடம் அந்த பையனோட பேசாத என்று சொல்ல சுருதி நீங்க பேசாதீங்க நான் பேசுவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலை வீட்டுக்கு வர முத்து ஒரு நிமிஷம் வா என்று மீனாவை கூப்பிட்டு ஆரத்தி எடுக்க சொல்ல மீனாவும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல வீட்டுக்குள் வந்த அண்ணாமலை கேசில் ஜெயித்து விட்டதாக மொத்த பணத்தையும் சேர்த்து கொடுக்க சொல்லி ஆர்டர் வந்திருப்பதாக சொல்ல சொல்கிறார்.

அதுவரை பெரிசாக ரியாக் செய்யாத விஜயா கூட ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து கொடுக்க சொல்லி தீர்ப்பு வந்ததாக சொன்னதைக் கேட்டு அப்ப கூட ஒரு லட்சம் கிடைக்க போகுதா என சந்தோஷப்பட முத்து இத முதல்ல நீயே சொல்லிருந்தீங்கன்னா அம்மாவே உங்கள ஆரத்தி எடுத்து வரவேற்ற இருப்பாங்க என்று நக்கல் அடிக்கிறார். மீனா கேஸில் ஜெயித்ததற்காக நன்றி சொல்ல விஜயா எல்லாம் என் மருமகள் ரோகினி வந்த நேரம் என்று ரோகினி உயர்த்தி பேச மீனாவின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.