ராதிகா ஈஸ்வரியை வெளியே அனுப்ப வேண்டும் என முடிவெடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்தே கிச்சனில் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க ஜெனி நான் ஏதாவது வேலை செய்யட்டுமா என்று கேட்டு பீன்ஸ் கட் பண்ண வேலை செய்வதை பார்த்து செல்வி கலாய்க்க அவர் முகம் மாறி ரூமுக்கு எழுந்து சென்று விடுகிறார். 

கமலா ராதிகாவிடம் எழில் ஈஸ்வரிக்கு போன் செய்து பேசிய விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்த ஈஸ்வரி ஒட்டு கேட்டு அதை உன் பொண்ணு கிட்ட அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கியா என்று வம்பு இழுக்கிறார். 

நான் ஒன்னு தொட்டு கேட்கல நீங்க ஊரு கேக்குற மாதிரி தான் பேசினீங்க என்று கமலா பதிலடி கொடுக்க ஈஸ்வரிக்கும் கமலாவுக்கும் வாக்குவாதம் உருவாகிறது. இதைப் பார்த்து கோபி அங்கு வந்துவிட்ட ஈஸ்வரி இப்படித்தான் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க என்று சொல்கிறார். உங்கம்மா காலைல மயங்கி விழல என்று சொல்ல கோபி என்னத்த என்ன பேசுறீங்க ஏன் இப்படி எங்க அம்மாவை போட்டு டார்ச்சர் பண்றீங்க என்று கோபப்படுகிறார். 

அடுத்ததாக செல்வி என்னிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்க ஜெனி அதெல்லாம் கொடுக்காத எழில் என்று சொல்கிறார். ஏன் நான் பெரிய நடிகை ஆயிட்டா இந்த வீட்டுக்கு வேலைக்கு வர மாட்டேன்னு பாக்குறியா என்று ஜெனி கேள்வி கேட்கிறார். நான் ஸ்கூல் படிக்கும்போதே கட்டபொம்மை வேஷம் போட்டு எல்லாம் நடிச்சிருக்கேன் என்று செல்வி நடித்துக் காட்ட செழியன் வீட்டுக்கு வருகிறார். இந்த நேரம் பார்த்து செல்வி மானங்கெட்டவனே என்று சொல்லித் திரும்ப செழியன் வந்து நிற்க ஷாக்காகிறார். அதன் பிறகு செழியன் எழிலுக்கு ஸ்வீட் ஊட்டி விட்டு வாழ்த்து சொல்கிறார். பிறகு ராமமூர்த்தியும் சத்தம் கேட்டு வெளியே வர செழியன் உடம்பு பரவாயில்லையா என்று கேட்கிறார். 

அமிர்தா என்ன நல்லா பாத்துக்கிட்டா என்று சொன்னதும் ஜெனி அப்போ நான் பார்த்துக்கலையா தாத்தா என்று கேள்வி கேட்கிறார். பிறகு பாக்கியா எல்லோரையும் சாப்பிட கூப்பிட பாப்பா அழுகிற மாதிரி இருக்கு நான் மேல போயிட்டு பாப்பாவ பார்த்துட்டு வரேன் என்று வந்துவிடுகிறார்.பிறகு பாக்கியா ஜெனிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து நீ குழந்தை வச்சிட்டு இருக்க.. நீயே சொல்ற குழந்தை ஒன்னு எழுப்பி விட்டதா என்று அதனால நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு தான் உனக்கு எந்த வேலையும் சொல்றது இல்ல.. ரெஸ்டாரன்ட் விஷயமா ஏதாவது வேலை இருந்தா உன்கிட்ட தானே வந்து சொல்றேன் உனக்கு அந்த வேலை வரும்போது கண்டிப்பா உன்னிடம் தான் சொல்லுவேன் என்று சமாதானம் செய்கிறார். 

மறுபக்கம் ராதிகா ரூமுக்குள் கோபமாக இருக்க கோபி உள்ளே வந்ததும் உங்க அம்மா சொன்னது மட்டும் கேட்டுட்டு என்கிட்ட சத்தம் போடுறீங்க. நாளைக்கு காலையில நம்ம எங்க வீட்ல இருக்க கூடாது என்று சொல்ல கோபி ஷாக் ஆகுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.