Sirakadikka Aasai Episode Update 26.07.23
Sirakadikka Aasai Episode Update 26.07.23

கடைசி நிமிடத்தில் ரோகிணி கல்யாணத்திற்கு போக மாட்டேன் என முடிவெடுத்துள்ளார்.

தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது தடுத்து நிறுத்தும் பிஏ உன்னுடைய கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்கலாம் என்று சவால் விட ரோகிணி என்ன அடி வாங்குனது பத்தலையா என்று கேட்கிறார்.

பி ஏ இனிமே என் வாழ்க்கையில் இழக்க ஒன்னும் இல்ல என் பொண்டாட்டி என் பையனை கூட்டிகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா, வேலையும் போயிடுச்சு இனிமே உன்ன பழிவாங்குவது மட்டும் தான் என்னுடைய முழு வேலை என அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் வீட்டுக்கு வந்த ரோகினி அப்செட்டாக இருக்க தன்னுடைய தோழியிடம் நடந்த விஷயங்களை சொல்ல அவர் அதனால் வரமாட்டான் என்று சொல்கிறார். ரோகினி மனோஜ் கிட்ட உண்மையை சொல்லிட்டா என்ன என்று கேட்க உண்மை தெரிந்தா மனோஜ் உன்னை ஏத்துக்குவானா? சரி அப்படியே மனோஜ் ஏத்துக்கிட்டாலும் உன் மாமியார் விஜயா ஏத்துக்குவாங்கலா? அவங்க நீ பணக்கார குடும்பத்தை சேர்ந்த பொண்ணுன்னு தான் உனக்கு இந்த மரியாதையை கொடுத்துக்கிட்டு இருக்காங்க, உன்னுடைய உண்மையான நிலைமை தெரிஞ்சா ஜெயில்ல பிடிச்சு போட்டுடுவாங்க என சொல்ல ரோகினி பயப்படுகிறார். ஒரே ஒரு நாள் சமாளிச்சுடலாம் அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.

மறுநாள் எல்லோரும் கல்யாணத்திற்கு தயாராகி முத்து குடும்பத்திலிருந்து கோவிலுக்கு வந்து இறங்குகின்றனர். முத்து மனோஜ் தன் காரில் வந்ததற்காக பணம் கேட்க விஜயா உன் அண்ணன் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்ததுக்கு கூட காசு கேட்பியா என கோபப்படுகிறார். எனக்கு கொடுக்க வேண்டிய 27 லட்சம் கொடுக்கல இதுக்கும் பணம் கொடுக்கலைன்னா எப்படி என கேள்வி கேட்கிறார்.

பிறகு விஜயா பணத்தை எடுத்துக் கொடுக்க முத்து அமைதியாகிறார். கோவிலுக்கு உள்ளே போகும்போது மீனாவின் அம்மா ஓடிவந்து வாங்க சம்மந்தி வணக்கம் என சொல்ல பொது இடத்தில் இப்படி எல்லாம் கூப்பிடாத பாக்கறவங்க என்ன நினைப்பாங்க என்று அவமானப்படுத்த பாட்டியும் அண்ணாமலையும் விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார்கள். பிறகு அண்ணாமலை மாலையெல்லாம் ரெடியாகி விட்டதா என்று கேட்க கட்டிக் கொண்டே இருக்கோம், ரெடி ஆகிடும் என்று சொல்ல பொறுமையாக கட்டுங்க என சொல்கிறார்.

உடனே விஜயா ஆமா பொறுமையாக ஒழுங்கா கட்டிக் கொடுங்க காசு வாங்கி இருக்கீங்கல என்று சொல்ல மீனா இதுக்கெல்லாம் நாங்க ஒன்னும் காசு வாங்கல அத்தை என மீனா பதிலடி கொடுக்கிறார். இன்னொரு பக்கம் ரோகினியும் அவரது தோழியும் காரில் வந்து கொண்டிருக்கும் போது பிஏ போன் செய்து பாட்டுப்பாடி கடுப்பாக்க பயத்தில் ரோகினி காரை விட்டு இறங்கி நான் கல்யாணத்துக்கு வரல என முடிவெடுக்கிறார். திரும்பவும் என்னால அசிங்கப்பட்டு நிற்க முடியாது என்று கண் கலங்குகிறார்.

இன்னொரு பக்கம் விஜயா ரோகினிக்காக கோவில் வாசலில் காத்திருக்க பரசு வந்து எல்லாரும் ஏன் இங்க நின்னுகிட்டு இருக்கீங்க என்று கேட்க ரோகிணி இன்னும் வரலை என்று அண்ணாமலை சொல்கிறார். உடனே முத்து ஒரு வேலை அந்த பொண்ணு ஓடிப் போயிடுச்சோ? அம்மா தானே சொன்னாங்க இவன மாதிரியே தான் அந்த பொண்ணு என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமல்லாமல் பரசு இல்லன்னா அந்த பொண்ணுக்கு மனோஜ் கல்யாணத்திலிருந்து ஓடிப்போன விஷயம் தெரிஞ்சிருக்குமோ என சொல்ல விஜயாவுக்கு பதட்டம் அதிகமாகிறது.

பிறகு முத்து எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு வராது இந்த கோவில்ல நிறைய இடம் இருக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுட்டு வீட்டுக்கு வந்துடு என மனோஜை கிண்டல் அடிக்கிறார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். மறுபக்கம் ரோகினி ரூமுக்கு சென்று கண்ணீருடன் நின்று கொண்டிருக்கிறார்.

இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைய அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மனோஜிடம் நான் உண்மையை சொல்லிட போகிறேன் என ரோகிணி கோவிலுக்கு ஓடி வருகிறார்.