மீனாவுடன் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கியுள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவின் கையைப் பிடித்து எழுந்து அவரை கட்டிக் கொள்ள முத்துவும் மீனாவை கட்டிக் கொள்ள பிறகு இருவரும் கட்டுப்பாடுகளை உடைத்து வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

மறுநாள் காலையில் மீனா சந்தோஷமாக எழுந்துக்கொள்ள புடவை முத்துவிற்கு அடியில் மாட்டிக் கொண்டிருக்க முத்து தான் புடவை இழுப்பதாக நினைத்து மீனா வெட்கப்பட்டு திரும்பிப் பார்த்து பிறகு உண்மையை அறிந்து புடவையை இழுத்து குளித்து முடித்து வெக்கப்பட்டு கொண்டே வெளியே வர விஜயா இதை பார்த்து குழப்பம் அடைகிறார்.

நேராக மீனா விளக்கேற்ற போக தடுத்து நிறுத்தும் விஜயா காலங்காத்தாலே தலைக்கு குளிச்சிட்டு விளக்கேத்த போற, உங்க அம்மா இத தான் சொல்லிக் கொடுத்தாங்களா என்று கேள்வி கேட்க எங்க அம்மா எல்லாம் சரியாத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அப்ப ஏன் விளக்கேத்த போற என்று விஜயா கேட்க இது அது இல்ல எனக்கும் சங்கீதம் இங்கீதம் தெரியும் என்று சொல்கிறார்.

அது எதுவானாலும் இருக்கட்டும் நீ விளக்கேற்ற கூடாது ரோகிணி தான் விளக்கு ஏத்தணும் என்று சொல்ல மீனா நானும் இந்த வீட்டு மருமகள் தான் எனக்கும் விளக்கேற்ற உரிமை இருக்கு என்று சொல்லி பதிலடி கொடுக்க விஜயா இந்த வீட்ல நான் சொல்றது தான் நடக்கணும் ரோகிணி ரெடி ஆயிட்டு வந்துடுவா அவ விளக்கு ஏத்தட்டும், நீ போய் சமைக்கிற வேலையை பாரு என்று சொல்ல அந்த நேரம் பார்த்து ரோகிணி கதவைத் திறந்து பல்லைத் துலக்கி கொண்டு வருகிறார்.

இதைப் பார்த்த மீனா அவங்கதான் விளக்கேற்றணுமா என்று நக்கலாக சிரிக்க விஜயா ரோகினியை பார்த்து ஷாக் ஆகிறார். ரோகினி இப்பதான் எழுந்தேன் எந்திரிக்கவே மனசு இல்ல பார்லர் போகணும்னு எழுந்திருச்சேன் என்று சொல்ல விஜயா நீ போய் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வாமா என்று அனுப்பி வைக்கிறார்.

உடனே மீனா இப்பவும் அவங்க தான் விளக்கேத்தனுமா அத்தை, மாமா வாக்கிங் போயிட்டு வர நேரமாச்சு விளக்கு ஏத்தாமல் இருக்கிறது பார்த்தால் கோபமாகி சத்தம் போடுவாரு என்று சொல்ல விஜயா சரி நீயே போய் ஏத்து என்று அனுப்பி வைக்க மீனா சந்தோஷத்தோடு விளக்கேற்றி சாமி கும்பிட விஜயாவுக்கு ஒரு வேலை இரண்டு பேருக்கும் நடக்க வேண்டியது நடந்து இருக்குமோ என்று குழப்பம் அடைகிறார்.

அடுத்ததாக மீனா கர்ப்பமாகி பிரசவ வலியில் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு நான்கு குழந்தைகள் பிறக்க நர்ஸ் குழந்தைகளை கொண்டு வந்து கொடுக்க முத்து எனக்கு நாளெல்லாம் வேண்டாம் எனக்கு நிறைய கடன் இருக்கு கமிட்மெண்ட் இருக்கு என கனவு கண்டு அலறி துடிக்க அந்த நேரம் பார்த்து வரும் அண்ணாமலை முத்துவின் குரல் கேட்டு ரூமுக்கு வர மீனா இதை பார்த்து வெக்கப்பட்டு நிற்க அண்ணாமலை முத்துவை எழுப்ப சொல்ல மீனா தட்டி எடுத்த நீ என்ன அதுக்குள்ள டிஸ்சார்ஜ் ஆகிட்ட, அப்பா நீ எப்ப ஹாஸ்பிடல் வந்த என்றெல்லாம் கேள்வி கேட்க அண்ணாமலை கனவு கண்டியா நல்ல கனவு தான் கண்டிருக்க என்று சொல்கிறார். நல்ல கனவா ஒன்னு வாங்கினால் மூன்று ப்ரீ-ங்கிற மாதிரி நாலு குழந்தை எடுத்துட்டு வந்து கொடுக்குறாங்க குழந்தைங்க‌ எங்க என்று கேட்க மீனா நீங்க வீட்லதான் இருக்கீங்க என்று சொல்ல முத்து கனவு என்பதை உணர்கிறார்.

பிறகு அண்ணாமலை வெளியே செல்ல முத்து எழுந்து மீனாவிடம் இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காது ஏதோ தெரியாமல் நடந்திடுச்சு என்று மன்னிப்பு கேட்டு பாத்ரூமுக்குள் ஓடி விடுகிறார். திரும்பவும் மீனா வெட்கப்பட்டுக் கொண்டே வெளியே வர விஜயா டைம் என்னாச்சு இன்னும் காபி கொடுக்கல என்று சத்தம் போட இப்ப கொடுத்துடறேன் என்று மீனா காபி போட போய் சந்தோஷத்தில் சர்க்கரையை அள்ளி அள்ளி கொட்டுகிறார்.

அண்ணாமலை விஜயா மற்றும் ரவிக்கு காபி கொண்டு வந்து கொடுக்க விஜயா அதை குடித்துவிட்டு என்ன இப்படி சக்கரையை கொட்டி வச்சிருக்க என்று சத்தம் போட ரவியும் சக்கர அதிகம் தான் என்று சொல்ல வர அண்ணாமலை தடுத்து நிறுத்தி விட விஜயா ரவி சக்கர அதிகமாக தானே இருக்கு என்று கேட்க அண்ணாமலையும் ரவியும் இல்லையே கரெக்டா தான் இருக்கு என்று சொல்கின்றனர்.

விஜயா அப்ப நான் பொய் சொல்றனா என்று கேட்க அண்ணாமலை அந்த காபி குடித்துவிட்டு சரியா தான் இருக்கு என அளந்து விடுகிறார். எனக்கு சக்கர அதிகமா தான் இருக்கு என்று விஜயா சொல்ல உடனே அண்ணாமலை அய்யய்யோ அப்படின்னா உனக்கு வந்துடுச்சா என்று கேட்க விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைய அடுத்ததாக வெளியான ப்ரோமோ வீடியோவில் முத்து மீனா எடுத்து வைத்த டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தயாராகி வெளிய வந்து ஏற்கனவே லேட் ஆகிடுச்சு, சாப்பிட்டால் இன்னும் லேட் ஆகும் என்று சொல்லிக் கொண்டே இருக்க மீனா சாப்பாட்டை ஊட்டி விட இதையெல்லாம் பார்த்து விஜயா அடுத்த பல்பு வாங்குகிறார்.