க்ரிஷ் கொடுத்த அதிர்ச்சியால் நடுங்கி நின்றுள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவை தனியாக அழைத்துச் சென்று நான் இது நல்லா இருக்கணும்னு நினைச்சேன் தயவுசெய்து உடனடியா இங்கிருந்து கிளம்பி போ என்று சொல்ல உடனே போனா சந்தேகம் வரும் கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பி போய்விடுகிறேன் என சொல்லி அவர் உள்ளே வருகிறார்.
பிறகு மனோஜ் எங்க போயிருந்த என்று ரோகினியிடம் கேட்க அவர் ரெஸ்ட் ரூம் போயிருந்ததாக சொல்லி சமாளிக்கிறார். அதன் பிறகு ரோகிணியின் அம்மா மீனாவிடம் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராக அப்போது தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் க்ரிஷ் வெளியே ஓடி வந்து பாட்டி என சொல்லிவிட்டு பிறகு ரோகிணியை பார்த்து அத்த என்ன சொல்ல அவர் நடுங்கிப் போய் நிற்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
உடனே ரோகிணியின் அம்மா அங்க பாரு வினாத்தாள் இருக்கா அவங்க தங்கச்சி சீதா அத்தை இருக்கா பின்னாடி ஒரு அத்தை இருக்காங்க பாரு என்று சொல்லி சமாளித்து அவ அப்படித்தான் யாரைப் பார்த்தாலும் உறவு முறை வைத்து கூப்பிடுவான் என்று சொல்லி சமாளிக்க முத்து, மீனா ஓடிவந்து அவனை கொஞ்ச ரோகிணி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்.
அதன் பிறகு இவர்கள் ஊருக்கு கிளம்பி வர ரோகிணியின் பின்னாடியே கிளம்பி வருகிறார். பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் இவர்களிடம் வந்து இனிமே நான் சொல்லாமல் சென்னைக்கு வரக்கூடாது மீனாவிடம் பேசக்கூடாது என சொல்ல அவரது அம்மா மாப்பிள்ளை வீட்டுல எல்லாரும் நல்லவங்களா தான் இருக்காங்க உண்மையை சொல்லுறது நல்லது எனக்குள்ள அதை நான் பார்த்துக்கிறேன் என்று ரோகினி சொல்கிறார்.
இதையெல்லாம் ரோகிணியை தொடர்ந்து பின் தொடர்ந்து கொண்டிருக்கும் பி ஏ கவனித்து விடுகிறார். அதன் பிறகு ரோகிணி பஸ் ஏறி ஊருக்கு போயிட்டு போன் பண்ணுங்க என சொல்லி அங்கிருந்து கிளம்பியதும் இவர்கள் பஸ் ஏற அந்த பிஏவும் பின்னாடியே பஸ் ஏறி இவர்களை பின் தொடர்கிறார்.
இருவரும் குமாரபாளையம் வந்திருந்த பிஏவும் அதே ஒரு இறங்குகிறார். மறுபக்கம் ரோகினி தன்னுடைய தோழியிடம் நடந்த விஷயங்களை சொல்ல அவர் மீனா உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே ஆப்பு வைக்க பார்த்திருக்கா என சொல்கிறார். இத்துடன் சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.