முகத்தில் காபியை ஊற்றிய விஜயாவை மீனா கேள்வி கேட்டு அதிர்ச்சியாக்கி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் விஜயா இருவரும் யோகாசனம் செய்து கொண்டிருக்க அண்ணாமலை அதை பார்த்து கிண்டல் அடித்து விட்டு யூனியன் ஆபீசுக்கு கிளம்ப விஜயா அந்த மீனாவ வர சொல்லிட்டு போங்க என்று சொல்கிறார்.

கீழே இறங்கி வரும் அண்ணாமலை பெருக்கிக் கொண்டிருக்கும் மீனாவிடம் நான் யூனியன் ஆபீஸ் போயிட்டு வரேன் உங்க அத்தை நேத்து டான்ஸ் ஆடினதுல எங்கேயோ புடிச்சிகிட்டு முதுகு வலி என்று ஏதோ யோகாசனம் என்ற பெயரில் என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கா உன்னை வர சொன்னா என்று சொல்ல அதற்குள் விஜயா மீனா என்று கூப்பிட மீனா கையில் துடைப்பத்துடன் ஓடுகிறார்.

என்ன மரியாதையே இல்லாம தொடப்பத்தோடு வந்து நிக்கிற அதை கீழே போடு என்று விஜயா திட்ட மீனா அதை கீழே போடுகிறார். ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்துட்டு வா என்று சொல்ல மீனா கிச்சனுக்கு செல்ல விளக்கமாறு என்று கூப்பிட்டு விளக்கமாறு எடுத்துட்டு போனு சொன்னேன் என்று சமாளிக்கிறார்.

பிறகு இருவரும் மொட்டை மாடிக்கு வந்து மூச்சு பயிற்சி செய்ய மீனா காபி எடுத்து வந்து கொடுக்க விஜயா அதை குடித்து பார்த்துவிட்டு என்ன இது வாயிலேயே வைக்க முடியல என்று கோபப்பட உங்களுக்கு முதுகு வலி என்று மாமா சொன்னாரு அதனால சுக்கு மிளகு எல்லாம் தட்டி போட்டு எடுத்து வந்திருக்கேன் என்று சொல்ல இதை நான் உன்கிட்ட கேட்டனா? டாக்டர் மாதிரி நீயா ஒன்னு பண்ணாத என்று கோபப்படுகிறார். சக்கர கூட கம்மியா இருக்கு எனக்கு என்ன சுகரா என்று கேட்க இப்படி கோபப்படாதீங்க கோபப்பட்டா சுகர் எல்லாம் வரும் என்று மீனா சொல்லிவிட்டு கீழே செல்ல இது ஒரு காபினு எடுத்துட்டு வந்துட்டா என்று விசிறி ஊத்த அது மீனாவின் முகத்தில் போய் விழுகிறது.

உடனே மேலே வரும் மீனா எதுக்கு அத்தை இப்படி பண்றீங்க? பொருள் எல்லாம் என்ன சும்மாவா வருது என்று கோபப்பட என்னமோ நீ சம்பாதிச்ச மாதிரி பேசுற என்று விஜயா கேள்வி கேட்க ஆமா இது என் புருஷன் சம்பாதிச்ச காசு என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். நான் அப்படி ஊத்துன நீ குறுக்க வந்துட்ட அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்க மேலே வரும் ரவி விஜயாவை பிடித்து திட்டுகிறார்.

ரவி நீங்க எதுக்கு சும்மா இருக்கீங்க புடிச்சி சத்தம் போட வேண்டியதுதானே என்று சொல்ல புருஷனே எனக்கு சப்போர்ட்டா இல்லாத போது எனக்கு எப்படி இந்த வீட்ல மரியாதை இருக்கும் எல்லாம் என் விதி என்று சொல்லி வருத்தப்பட்டு செல்ல ரவி யோசிக்கிறார்.

அடுத்ததாக ரவி ஸ்ருதிக்காக கேக் செய்து வைத்து போன் செய்ய ஹோட்டலுக்கு வரும் ஸ்ருதி அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு நாம ரெண்டு பேரும் பார்ட்னர் ஆகிடலாமா என்று கேட்க ரவி என்ன கேக்குற என்று புரியாமல் முழிக்க ஹோட்டல் ஆரம்பிக்கலாம் நம்ப ரெண்டு பேரும் பார்ட்னர் ஆகிடலாம் என்று சொல்ல கொஞ்ச நாள் போகட்டும் என்று ரவி கூறுகிறார்.

மேலும் உங்க அண்ணி மீனா எப்படி இருக்காங்க என்று ஸ்ருதி கேட்க இருக்காங்க என்று முத்து மீனாவிடம் சண்டை போட்ட விஷயங்களை சொல்ல உங்க ரெண்டு அண்ணா அண்ணியும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணு, மனசு விட்டு பேசினால் எல்லாம் சரியா போயிடும் என்று சொல்ல நல்ல ஐடியா உடனே செய்கிறேன் என்று ரவி கூறுகிறார்.

அடுத்ததாக ரவி முத்துவின் கார் செட்டுக்கு வந்து முத்துவிடம் பேசும்போது வாழ்க்கையில் கல்யாணம் மட்டும் பண்ணிடாத என்று முத்து அறிவுரை சொல்ல முதல்ல இப்படி பேசுறது நிறுத்து, உன்னால அன்னிக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று மீனா படும் கஷ்டத்தை பற்றி எடுத்துச் சொல்கிறார்.

இன்னைக்கு நீ இப்படி வெளியே இருக்கனா அதுக்கு காரணம் அண்ணி தான். கார் மாட்டுனதுக்கு காரணம் அண்ணி கிடையாது, உன்னுடைய முன்கோபம் தான் நீ மட்டும் போலீசை அடிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. வாழ்க்கையில பிரச்சனைன்றது வரத்தான் செய்யும், அது எப்படி தீர்க்கிறதுன்னு யோசி.. அதுக்கு இவங்க தான் காரணம் அவங்க தான் காரணம்னு பழி போடாத என்று சொல்ல முத்து யோசிக்க தொடங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ஹோட்டலில் ரவி பார்ட்டி கொடுக்க மனோஜ் அப்பாவை பற்றி தப்பாக சொல்ல முத்து கோபப்பட்டு விரலைப் பிடித்து உடைக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.