
மீனா முத்துவை அடக்க முருங்கைக்காயால் தவிக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை கோவிலில் தன்னுடைய அம்மாவிடம் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என வருத்தப்பட அவர் கண்டிப்பா நல்லபடியா நடக்கும் என்று ஆறுதல் கூறுகிறார். முத்து வேற பணம் கேட்டு பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்ல அதெல்லாம் எதுவும் ஆகாது, அவன் அமைதியா இருடானு சொன்னா அமைதியா இருந்துருவான் என்று பேசி சமாதானம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து மீனா முத்து கோபப்பட எதுக்கு சும்மா பணம் பணம்னு பேசிகிட்டு இருக்கீங்க மாமா அவருடைய பையனுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறாரு அதுல எந்த தப்பும் இல்லையே என்று சொல்லி முத்துவை ஆப் செய்கிறார்.

பிறகு முத்து அவன் பணம் கொடுக்காமல் இந்த கல்யாணம் மட்டும் நடந்தா மண்டையை உடைத்து விடுவேன் என சத்தம் போட மண்டையை உடைக்கறது எல்லாம் அப்புறம் இருக்கட்டும் முதல்ல போயிட்டு இந்த தேங்காய் உடைங்க பசிக்குது என சொல்லி முத்துவை தேங்காய் உடைக்க வைக்கிறார்.
பிறகு அண்ணாமலையிடம் மீனா இந்த கல்யாணத்தை நாங்க நல்லபடியா நடத்தி வைக்கிறோம் என சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார். பிறகு அண்ணாமலை நான் இப்படியே ஊருக்கு கிளம்புறேன் என சொல்ல முத்து நானும் கூட வரேன்னு சொல்ல பாட்டி திட்டி அண்ணாமலையை ஊருக்கு வழி அனுப்பி வைக்கிறார்.
பிறகு ரவி பைக்கில் செல்ல ஸ்ருதி அவனைப் பார்த்து வேக வேகமாக பின் தொடர்ந்து சென்று வண்டியை நிறுத்தி டேய் பிராடு என் பணத்தை கொடுடா என சண்டை போட ரவி மெண்டல் ஹாஸ்பிடல் போயிடு என சொல்லி திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

அதன் பிறகு பாட்டி இரவு சாப்பாடு எல்லாம் முருங்கைக்காய் சாம்பார் முருங்கைக்கீரை பொரியல் முருங்கைப்பூ ரசம் என அனைத்தும் முருங்கை சார்ந்த பொருட்களை வைத்து சமைத்து முத்துவை சாப்பிட வைக்க மீனா சிரித்துக் கொண்டே பரிமாறுகிறார்.
பிறகு ரூமுக்கு போன முத்துவுக்கு பாட்டி மீனாவிடம் பால் கொடுத்து அனுப்ப இதுவும் முருங்கைக்காயில் செஞ்ச பால் இல்லையே என கேட்டு உள்ளே செல்கிறார்.
முத்து ரூமில் பாயை தேட பாட்டியிடம் வந்து பாய் எங்கே என கேட்க போய் கட்டல்ல படுடா என அனுப்பி வைக்கிறார். ரூமுக்குள் வந்த முத்து கதவை சாத்த அதைப் பார்த்து மீனா சிரிக்கிறார், முத்து வெட்கப்படுகிறார்.
இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
