மீனாவை விஜயா அவமானப்படுத்த முத்து பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா டப்பிங் பேச பயப்பட ஸ்ருதி அதெல்லாம் ஒன்னும் இல்ல தைரியமா பேசுங்க என்று சொல்ல நீ நான் அசால்டாக பேசி ஸ்கோர் செய்கிறார்.

எல்லோரும் மீனாவை பாராட்ட சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்பி வெளியே வரும் அவர் தன்னுடைய தங்கச்சி சீதாவிடம் டப்பிங் பேசிய விஷயங்களை பேசிக்கொண்டே நடந்து வர அப்போது கந்துவட்டிக்காரன் எதிரில் வந்து என்ன மீனா என்னை பாக்க வீட்டுக்கு வந்ததா சொன்னாங்க உன் புருஷன் வண்டி வேற மாட்டிக்கிச்சாம் அவன் என்ன இப்படி கடத்தல்காரனா இருக்கான் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என நக்கலாக பேச அவருடைய கார்ல ரெண்டு பேரை ஏத்தி மாட்டி விட்டது நீதானே? எங்களுக்கு தெரியும் அவருக்கு மட்டும் தெரிஞ்சா உன்ன சும்மா விட மாட்டாரு. நான்தான் இதுவரைக்கும் அவருக்கு விஷயத்தை தெரியாம பார்த்துக்கிட்டு இருக்கேன், அதுவும் உன் மேல இருக்க அக்கறையில் கிடையாது, அவர் வாழ்க்கைக்காக என்று சொல்லி பதிலடி கொடுக்கிறார்.

மேலும் அவருக்கு மட்டும் உன் மேல சந்தேகம் வந்துச்சு அன்னைக்கு உனக்கு மயான கொள்ளை தான் என்று சொல்ல அவன் முகம் மாற பார்த்தியா அந்த வார்த்தையை கேட்டது உன் முகத்துல பயம் வந்து போகுது ஒழுங்கு மரியாதையா வேலைய பாரு அவர்கிட்ட மாட்டி உன் உயிர விட்டுடாத என பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் விஜயா ரோகினிக்கு எடுத்து வந்த புடவை நகையை போட்டு காட்ட சொல்லி அழகு பார்த்துக் கொண்டிருக்க மீனாவை காபி எடுத்துட்டு வா, இந்த புடவையை மடி என வேலை வாங்கி அவமானப்படுத்துகிறார். அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததுல இருந்து அவ புருஷன் போலீஸ் ஸ்டேஷனு அலைஞ்சு கிட்டு இருக்கான் என ராசி இல்லாதவள் என்பது போல பேசி மீனாவை கஷ்டப்படுத்துகிறார்.

அதன் பிறகு அண்ணாமலை வந்ததும் புடவை நகைகளின் விலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உடனே விஜயா பார்த்தது போதும் என சமாளிக்க முயற்சி செய்ய ரோகிணியும் வேலை இருக்கு என சொல்லி கிளம்பி விடுகிறார். அடுத்ததாக முத்து வந்து புடவை எல்லாம் பார்த்து விட்டேன் மீனாவுக்கு எங்கே? என்று கேட்க அவளுக்கு எதுக்கு எடுத்து கொடுக்கணும் என விஜயா கேட்கிறார்.

மேலும் அவளும் என் மருமகளும் ஒன்னா? இவ பூக்காரி அவ பியூட்டிஷியன் என சொல்ல முத்து இவ கட்டுற பூ நாளைக்கு வாடிடும், அவ போடுற மேக்கப் இன்னைக்கு சாயங்காலமே வாடி போயிடும் அவ்வளவுதான் வித்தியாசம் என பதிலடி கொடுக்கிறார். மேலும் அண்ணாமலை இதையெல்லாம் வாங்க பணம் ஏது? எப்படி திருப்பி கட்ட போற என்று கேட்க அதுதான் மருமக சம்பாதிக்கிறா, மனோஜ் வேலைக்கு போறான்ல வருமானம் வரும் என்று சொல்ல அப்படின்னா முத்து அந்த பணத்தை அப்படியே என்கிட்ட கொடுங்க என்று சொல்கிறான்.

எதுக்கு உன்கிட்ட தரணும் என்று விஜயா கேட்க மனோஜ் சத்தியம் செஞ்சது ஞாபகம் இருக்கா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் மனோஜிடம் சம்பளம் எவ்வளவுடா என்று கேட்க அவன் மனசுக்குள் வேலையே இல்ல சம்பளத்தை பற்றி கேட்கிறான் என்று சொல்கிறார். அண்ணாமலை முத்துவை அமைதியாக்கி மீனாவிடம் கூட்டிச்சென்று அவனுக்கு சாப்பாடு போடு என சொல்கிறார்.

பிறகு மீனாவிடம் முத்து நீயும் கேட்டு வாங்க வேண்டியது தானே என்று சொல்ல எனக்கு அதெல்லாம் பிடிக்காது என்று சொல்ல அவங்க கிட்ட அப்படித்தான் வாங்கணும் என்று சொல்கிறார். தனக்காக பேசிய முத்துவுக்கு மீனா நன்றி சொல்ல முத்து எதுக்கு என கேட்க எனக்காக பேசியதற்காக என்று சொல்ல இவங்க கிட்ட இருந்து அப்படித்தான் பணத்தை வாங்க முடியும் என முத்து சொல்கிறார். அப்போ அதுக்காக மட்டும் தான் கேட்டீங்களா என மீனா கேட்க ஆமா வேற எதுக்கு சாப்பாட்டை போடு என சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.