விஜயாவுக்கு ஆப்பு வைத்துள்ளார் கந்துவட்டிக்காரர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது காரில் சரக்கை கடத்திய இருவரை பார்த்துவிட அவர்களை துரத்தி செல்கிறார்.

இன்னொரு பக்கம் விஜயா கண்டுபிடிக்காரனால் நடுங்கி போய் உட்கார்ந்து கொண்டிருக்க வட்டி வேற கட்டியாகணும் என ரூமுக்குள் சென்று ரோகிணியிடம் பணம் கேட்க அவர் கல்யாணத்துக்காக நிறைய செலவு ஆகிடுச்சு.. என்கிட்ட ஒரு 10,000 ரூபாய் தான் இருக்கும் என்று சொல்ல அது பத்தாது என்று விஜயா சொன்ன சரி வளையலை தரேன் அடகு வச்சுடுங்க அப்படியும் காசு போதவில்லை என்றால் விட்டுடுங்க என்று சொல்லி வளையலை கழட்ட வளையல் வராதது போல டிராமா போடுகிறார்.

ஒரு கட்டத்தில் விஜயா வேண்டாமா என்று சொல்லி வெளியே வந்துவிட பார்வதி வலையில் வாங்கிக்க வேண்டியதுதானே என்று சொல்ல இல்ல இப்ப வலையில் வாங்கிட்டு அவங்க அப்பா வந்து பார்த்தா போட்டு நகையெல்லாம் இல்லன்னு நம்மள பத்தி என்ன நினைக்கிறார் என்று கூறுகிறார்.

அடுத்து மீனாவிடம் சென்று சீக்கிரம் சமை ரோகினிக்கு பசிக்கும், அவ ஒன்னும் உன்ன மாதிரி வீட்ல இருக்கவங்க கிடையாது பியூட்டி பார்லர் வச்சு நடத்திக்கிட்டு இருக்கா என்று சொல்லி அரிசி எடுத்துக் கொடுத்துவிட்டு வெளியே வருகிறார்.

மறுபக்கம் முத்து அவர்களைப் போட்டு அடி வெளுக்க இது எல்லாம் சுதாகர் வேலை என தெரிய வருகிறது. பிறகு முத்து சுதாகரை புரட்டி எடுக்க ஒரு கட்டத்தில் அவன் தப்பிச்செல்ல அந்த பக்கமாக வரும் ரவி முத்துவுக்கு தலையில் அடிபட்டு இருப்பதை பார்த்து தடுத்து நிறுத்தி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய திறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.