அண்ணாமலை முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் முத்து கார் ரெடி பண்ண எப்படியும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல பணம் செலவாகும் நான் பார்த்திபுக்கு வச்சி பணம் வாங்கிட்டு வரேன் என சொல்ல அண்ணாமலை வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார்.

ஆர்சி புக் வச்சா அவ்வளவு பணம் கிடைக்காது. அதனால வீட்டு பத்திரத்தை வச்சி பணம் வாங்கிக்கலாம் மனோஜ் கல்யாணத்துக்கு பணம் தேவைப்படுது உனக்கும் தேவைப்படுகிறது என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். வீட்டு பாத்திரத்தை எல்லாம் விற்கும் இடம் மாட்டேன் அது ஒன்னு தான் எங்கப்பா எனக்காக கொடுத்தது என தடுத்து நிறுத்துகிறார்.

ஆனால் அண்ணாமலை ஆர்சி புக் வைத்து அவ்வளவு பணம் கிடைக்காது என்று சொல்ல விஜயா வீட்டு பத்திரம் இல்லாத விஷயம் தெரிந்து விடும் என்பதற்காக இப்ப என்ன உங்களுக்கு பணம் தான் வேண்டும் என சொல்லி உள்ளே சென்று மாமியார் கொடுத்த பணத்தை எடுத்து வந்து கொடுக்கிறார். மனோஜ் கல்யாணத்துக்கு என்ன பண்ணுவீங்க என்று கேட்க அத நான் பாத்துக்கிறேன் என சொல்லி இந்த பணத்தை கொடுக்கிறார்.

அதன் பிறகு விஜயா பார்வதியை அழைத்துக்கொண்டு கந்துவட்டிக்காரர் ஆபிசுக்கு வந்து மேலும் பணத்தை கேட்கிறார். அவர் வேறு ஏதாவது டாக்குமெண்ட் எடுத்து வந்துட்டீங்களா என்று கேட்க அவர் டாக்குமெண்ட்டை வைத்து மேலும் 7 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து இதற்கு தனி வட்டி என சொல்லி அனுப்புகிறார்.

பிறகு முத்து அங்கு வர அவர் இப்போதைக்கு லீவு கட்ட முடியாது கார புடிச்சு தங்க ரெண்டு மாசம் டைம் என்ன என்று சொல்ல அந்த கந்து வட்டிக்காரன் என்கிட்ட சீஸ் பண்ண வண்டி இருக்கு அதை ஓட்டி டிவீவ் கட்டு, வண்டிக்கு வாடகையும் கொடுத்துடு என சொல்லி கார் சாவியை கொடுத்து அனுப்புகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த முத்து வருத்தமாக இருக்க மீனா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.