விஜயாவுக்கு மனோஜ் ஷாக் கொடுக்க முத்துவால் பதறி உள்ளார் மீனாவின் அம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து வருவதால் மீனா கடைக்குச் சென்று மீன் எல்லாம் வாங்கி வர வழியில் வருபவர்கள் எல்லோரும் உன் புருஷனால் ஒரு நாள் கூட உன்னை விட்டு இருக்க முடியல போல அடுத்த ஆடிக்குள்ள குழந்தையை பெத்திடுவீங்க போல என்று கலாய்க்க இந்த ஆடிகுள்ள கூட பெற்றுப்போம் உங்களுக்கு என்ன என மீனா ஜாலியாக பதில் சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.

மீனா எங்க போனான்னு தெரியாம தவிக்கும் அவரது அம்மா கையில் மீன் எல்லாம் எடுத்து வந்திருப்பதை பார்த்து என்ன மாப்ள வர்றாரா? அவரை ஏன் இப்ப வர சொன்ன? ஏன் இங்க வராரு வெளியே எங்கேயாவது சாப்பிட சொல்ல வேண்டியது தானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சாப்பிட வருபவரை எப்படி வேணாம்னு சொல்ல முடியும் என்று மீனா சொல்லியும் அவரது அம்மா வேண்டாம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க சரி இனிமே அவரும் வரமாட்டாரு நானும் வர மாட்டேன், நான் என் புருஷன் வீட்டுக்கு போய் சமைச்சு போடுறேன் என்று மீனா கோபப்பட்டு கிளம்ப அம்மா சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருகிறார்.

பிறகு மீனா முத்துவுக்காக மீன் குழம்பு ,மீன் வருவல், முட்டை வறுவல் என எல்லாத்தையும் செய்து வைத்து காத்திருக்க முத்து வீட்டுக்கு வர மீனாவின் அம்மா பதற்றப்படுகிறார். மீனா முத்துவை உட்கார வைத்து எல்லாத்தையும் பரிமாற முத்து எல்லாரையும் சாப்பிட உட்கார சொல்ல மீனாவின் அம்மா முதல்ல நீங்க சீக்கிரம் சாப்பிடுங்க மாப்பிள்ளை என்று சொல்ல முத்து எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம் என்று மீனாவின் தம்பியையும் சீதாவையும் உட்கார சாப்பிட வைக்கிறார்.

மீனாவின் அம்மா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முத்துவிடம் போதுமா மாப்பிள்ளை என்று கேட்க மீனா இப்பதான் சாப்பிடவே ஆரம்பிச்சி இருக்காரு, அதுக்குள்ள போதுமானு கேக்குற என்று திட்டி இன்னும் சாப்பாடு பரிமாற முத்து சாப்பிட்டு முடித்ததும் சரி மாப்ள கிளம்பறீங்களா உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் என்று கேட்க வேலை எதுவும் இல்ல அத்தை, சவாரி வந்தால் தான் வேலை செட்டுக்கு போனாலும் தனியா தான் இருக்கணும் என்று சொல்ல இவர் ஷாக் ஆகிறார்.

அடுத்ததாக முத்து மீனா பாய் எங்க இருக்கு என்று கேட்க மீனாவின் அம்மா எதுக்கு மாப்பிள்ளை என்று கேட்க டயர்டா இருக்கு ஒரு குட்டி தூக்கம் போட்டா நல்லா இருக்கும் என்று சொல்ல மீனா நீங்க வாங்க என்று ரூமுக்கு கூட்டி சென்று பாய் போட்டு படுத்து தூங்க சொல்ல இங்கே விஜயாவை நினைத்து மீனாவின் அம்மா பதறுகிறார்.

மறுபக்கம் பார்லருக்கு வந்த மனோஜ் அங்கு ரோகிணி இல்லாததால் அவருக்கு போன் செய்ய ரோகினி என்னுடைய பிரண்டோட பார்லர்ல இருப்பதாக பொய் சொல்லி சமாளிக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த மனோஜ் விஜயாவிடம் வேலை போன விஷயத்தை சொல்ல உன்னால இந்த வேலை கூட தக்க வச்சிக்க முடியலையா என அதிர்ச்சி அடைகிறார். உன்ன நம்பி வேற வீட்டை அடமானம் வச்சிருக்கேன் அந்த பைனான்சியர் வேற ரொம்ப மோசமானவனா இருக்கான், முத்துவுக்கு வேற அவன ரொம்ப நல்லா தெரியும். எப்ப மாட்ட போறேன்னு தெரியல என புலம்பி தவிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.