ரவியிடம் ஸ்ருதி காதலை சொல்ல ஸ்ருதியின் அப்பாவுக்கு அண்ணாமலை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி நீ சமைச்சு தராததுனால ரெண்டு நாளா நான் சாப்பிடவே இல்லை என்று சொல்ல ரவி சாப்பிட வேண்டியது தானே என்று கூறுகிறார். எனக்கு உன்ன மாதிரி எல்லாம் உடனே ஒருத்தரை விட்டுட்டு இன்னொரு ஆளை பார்த்துட்டு போக தெரியாது என்று சொல்லி என்னை இப்ப நீ சாப்பிட கூட்டிட்டு போற என்று ரவியை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த முத்து சாப்பிட எதுவும் இல்லாததால் அண்ணாமலைக்கு போன் செய்து எங்கப்பா இருக்க? சாப்டியா என கேட்க அவர் நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டியா என்று கேட்க வீட்ல எதுவும் இல்லை என்று கூறுகிறார். அவங்க எதுவும் சமைச்சி இருக்க மாட்டாங்க நீ போய் நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடு என்று சொல்லி ஃபோனை வைக்க முத்து மீனாவுக்கு போன் செய்து சாப்பாடு இருக்கா? நீ வீட்ல இருக்க ஞாபகத்துல வீட்டுக்கு வந்துட்டேன் இங்க ஒண்ணுமே இல்ல என்று சொன்னதும் நீங்க உடனே கிளம்பி வாங்க என்று சொல்லி மீனா வேக வேகமாக சமைக்கத் தேவையான பொருட்களை வாங்க கடைக்கு செல்கிறார்.

அடுத்ததாக ரவி ஸ்ருதியுடன் வண்டியில் வந்து கொண்டிருக்க அந்த மரத்தடியில் நிறுத்து என ஸ்ருதி சொன்னதும் ரவியும் வண்டியை நிறுத்த ஸ்ருதி இதுவரைக்கும் நான் எவ்வளவோ பேரை சந்தித்து இருக்கேன், எனக்கு அப்படி யாரும் க்ளோஸான ப்ரெண்டா இருந்தது கிடையாது. நான் எங்க அப்பா அம்மா கூட இருந்தாலும் தனியா இருக்கிற மாதிரி தான் ஃபீல் பண்ணி இருக்கேன். என் வாழ்க்கையில நீ வந்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கை கலர்ஃபுல்லா இருக்கு.

உனக்குள்ளவும் அந்த பீல் இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் அதை நீ சொல்லுவியான்னு எனக்கு தெரியல, நான் யாருக்கும் எதுக்காகவும் பயப்பட மாட்டேன் என் மனசுல இருக்கறத சொல்றேன் என்ன சொல்லி ஐ லவ் யூ சொல்லி ரவியின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இதை ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் அந்த வழியாக காரில் வந்த போது பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

இவர்கள் வீட்டுக்கு வந்ததும் ஸ்ருதி என் அம்மா கோபப்பட அவருடைய அப்பா நீ திரும்பவும் அவகிட்ட எதுவும் பேசாத நாம ஏதாச்சு சொன்னா அவ இன்னமும் அவன் கிட்ட நெருங்கி தான் பேசுவா எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் என்று சொல்லி அண்ணாமலைக்கு போன் போட்டு உங்கள உடனே பாக்கணும் வீட்டுக்கு வாங்க என்று சொல்ல நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும்? உங்களுக்கு என்ன பாக்கணும்னா நீங்க நான் இருக்கிற இடத்துக்கு வாங்க, நான் இப்போ யூனியன் ஆபீஸ்ல தான் இருக்கேன் வேணும்னா இங்க வாங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

என்னால யூனியன் ஆபீஸ் எல்லாம் வர முடியாது, வேற ஏதாவது இடம் சொல்லுங்க என உயர் அதிகாரி சொல்ல அண்ணாமலை இப்போ நான் கொஞ்சம் வேலையா இருக்கேன், நான் எங்கே எப்போ மீட் பண்ணலாம்னு யோசிச்சு சொல்றேன் அப்போ வாங்க என சொல்லி ஃபோனை வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.