மீனாவை காதலிக்கும் நபர், முத்து கொடுக்கும் டிப்ஸ்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மீனாவை காதலிக்கும் நபருக்கு முத்து எப்படி காதலை சொல்ல வேண்டும் என்ற டிப்ஸ் கொடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் க்ரிஷ் விஷயத்தில் என்னமோ இருக்கு என்று சொல்ல கிரிஷ் என்னங்க பண்ணப் போறான் என்று கேட்கிறார். கிருஷ சொல்லல ஆனா கிருஷ்ண சுத்தி இருக்குறவங்க ஏதோ ஒன்னு பண்றாங்க எனக்கு தெரிஞ்சு அவங்க அம்மா தான் இதெல்லாம் பண்ணுது என்று நினைக்கிறாய் என்று சொல்ல கண்டுபிடிக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார் இதை மறைந்து நின்று ரோகினி கேட்டு அதிர்ச்சி அடைகிறார். திடீரென்று ரோகினி மனோஜ் மற்றும் விஜயாவிற்கு உண்மைகள் தெரிந்து அவர்கள் இவரை வீட்டை விட்டு வெளியே துரத்துவது போல கனவு கண்டு அலறி அடித்து எழுந்து கொள்கிறார். மனோஜ் என்ன ஆச்சு ரோகினி என்று கேட்க ஏதோ கெட்ட கனவு மனோஜ் நீ என்னை விட்டு போக மாட்டால என்று கேட்க போகமாட்டேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் மீனா பூ கொடுத்துக் கொண்டிருக்க ஒரு நபர் மீனாவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை கவனித்த மீனா வண்டி எடுத்துக் கொண்டு கிளம்ப மீனா போகும் இடமெல்லாம் பின்னாடியே வருகிறார். இதனால் மீனா வித்யாவின் வீடு இங்கதான இருக்கு நம்ம அங்க போயிடலாம் என்று முடிவெடுத்து அங்கே செல்கிறார்.
வித்யா முத்து மீனாவின் வீடியோக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்க எவ்வளவு ரொமான்டிக் ஜோடியாக இருக்காங்கல்ல என்று பேசிக் கொண்டிருக்கிறார் ரோகினி இந்த போன முதல்ல கடலில் தூக்கி போடு எப்ப வேணா மீனா இங்கே வரத்துக்கான சந்தர்ப்பம் ஏற்படும் இந்த மாதிரி பண்ணிட்டு இருக்காத என்று சொல்ல சரி கடல்ல போறதுக்கு முன்னாடி கடைசியா பாத்துக்குறேன் என்று மீண்டும் பார்த்துக் கொண்டிருக்க மீனா வந்து கதவை தட்டுகிறார். உடனே வித்யா கையில் இருக்கும் ஃபோனுடன் எப்படியும் மீனாதான் வந்து கதவு தட்டுவாங்க நீ நினைப்ப என்று சொல்லி கதவை திறக்க மீனா நிற்கிறார். இருவரும் அதிர்ச்சியாகி நிற்க மீனா வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டேன் பதற்றமாக இருக்கிறார் என்ன ஆச்சு என்று கேட்க நான் பூ கொடுக்க போன இடத்துல ஒருத்தன் ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கா என்று சொல்லி பதறும்படி கேட்க நான் போய் பார்க்கிறேன் என்று வித்யா பார்க்க அவன் சென்று விடுகிறான். பிறகு கொஞ்ச நேரத்தில் மீனாவும் சரி நான் கிளம்புறேன் என்று சொல்ல வித்யா தண்ணி குடிச்சிட்டு போங்க என்று சொல்லி உட்கார வைத்து மீனாவின் பக்கத்தில் முத்துவின் போனை வைக்க தண்ணி எடுத்துக் கொண்டு வரும் வரை மீனா போனை கவனிக்காமல் இருந்து விடுகிறார். உடனே மீனாவும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். உடனே ரோகினி வித்யாவை திட்டி விட்டு இதுக்கு தான் சொன்ன முதல்ல போய் கடல்ல போட்டு எனக்கு போன் பண்ணி என் வாழ்க்கையில் நீயும் விளையாடாதே என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
மறுபக்கம் முத்து கூட வேலை செய்யும் ஒரு நம்பருக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். அந்த நேரம் பார்த்து மீனாவை பாலோவ் பண்ணும் நபர் வருகிறார். பிறகு தான் தெரிகிறது பிறந்தநாள் கொண்டாடியவரின் தம்பி இவர் என்றும் இவரை நன்றாக படிக்க வைத்து இன்ஜினியர் ஆகியுள்ளதாகவும் சொல்லுகிறார். கல்யாணம்தான் பண்ணிக்க சொன்னா லவ் பண்ணி தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்காரு என்று சொல்ல முத்து அதுவும் நல்ல விஷயம் தானே என்று சொல்லுகிறார். இப்பதான் கொஞ்ச நாளா ஒரு பொண்ண பாத்துகிட்டு இருக்கேன் இன்னும் பேசினதில்ல என்று சொல்லுகிறார்.
உடனே அவரை தனியாக கூட்டி சென்று செல்வம் முத்து பேசுகின்றனர். உன்னோட லவ் எது வரைக்கும் போயிட்டு இருக்கு சொல்லு என்று முத்து கேட்க இப்பதானே கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தேன் அங்கங்க நின்னு பார்ப்பேன் என்று சொல்ல பார்த்துக்கிட்டே இருந்தா வேற ஒருத்தன் கல்யாணம் பண்ணிட்டு போயிடுவான் என்று முத்து சொல்லுகிறார். முத்து என்ன ஐடியா கொடுக்கிறார்?அதற்கு முருகனின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.