சத்யாவை தேடி அலையும் முத்து, அருண் செய்த உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சத்யாவை முத்து தேடி அலைய,அருண் உதவி செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிசிடிவி கேமராவில் சிட்டி தான் சத்யாவை கடத்திருப்பது தெரிய வருகிறது உடனே முத்து அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு வெளியில் வந்து விடுகின்றனர் பிறகு முத்து சத்யாவுடன் மொபைல் கடைசியா எங்க ஆஃப் ஆகி இருக்கிறது தெரிஞ்சா கண்டுபிடிச்சிடலாம் என்று சைபர் கிரைம் ஆபீஸ்க்கு போகின்றனர்.
மறுபக்கம் சீதா அருணுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல பயப்படாத சீதா நான் சைபர் கிரைமில் உன்னோட தம்பி நம்பர் அனுப்பி அவன் எந்த இடத்தில் இருக்கான்னு லொகேஷன் அனுப்புறேன் என்று சொல்லி போனை வைக்கிறார் முத்து சைபர் கிரைம் ஆபீஸில் சொல்லி விசாரிக்க அவர்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் வேணும் நீங்க போய் கம்ப்ளைன்ட் போடுவாங்க அவங்க போன் பண்ணுவாங்க அப்புறம் தருவோம் என்று சொல்லி விட முத்துவும் செல்வமும் கெஞ்சியும் அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர். ஆனால் அருண் லொகேஷனை வாங்கி விடுகிறார்.
உடனே சீதாவிற்கு ஃபோன் பண்ணி நான் சத்யாவோட போன் ஆஃப் ஆகி இருக்கிற இடத்தோட லொகேஷன் அனுப்பி இருக்கேன் என்று சொல்லி நான் போய் அங்க பாக்குறேன் என்று சொல்லுகிறார் வேணாங்க எங்க மாமா பார்த்து பாரு நான் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா பண்றேன் என சொல்லி போனை வைத்துவிட்டு முத்துவிற்கு லொகேஷன் அனுப்பி போன் பண்ணி சொல்லுகிறார் உனக்கு யார் சொன்னது என்று கேட்க பிரண்டு மூலமா தெரிஞ்சுக்கிட்டேன் என்று சொல்லி சமாளிக்கிறார் சரி நாங்க போய் பாக்குறோம் என முத்து கிளம்புகிறார்.
சீதா வீட்டில் டென்ஷனாக இருக்க சந்திரா மற்றும் மீனா வந்து சீதாவிடம் கேட்கின்றனர் சந்திரா என்கிட்ட காலேஜ் போயிருக்கானு தானே சொன்னேன் என்று சொல்ல நீ பயந்துடுவேன் தாம்மா சொல்லல என்று சொல்லுகிறார் மீனா என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் என்று கேட்க மாமா தான் அக்கா உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாரு என்று சொல்லுகிறார். உடனே சந்திரா என் பையன் என்ன ஆனாலும் தெரியலையே இன்னும் ஒரு எக்ஸாம் தான் இருக்கு இது எழுதியிருந்தான்னா அவன் தலையெழுத்து மாறிடும் என்று நினைத்தேன் என்ற புலம்ப ஆரம்பிக்கிறார். சத்யாவுக்கு மட்டும் ஏதாவது ஆனா நான் உயிரையே விட்ருவேன் என்று சொல்ல மீனா அவரை சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு மீனாவும் பயத்தில் இருக்கிறார்.
மறுபக்கம் முத்து லொகேஷனை தேடி சென்ற இடத்தில் சத்யாவை தேடி அலைகிறார். சத்யா சிட்டியிடம் தயவு செய்து என்னை விட்டுடு இந்த எக்ஸாம் எழுதினால் என்னோட தலையெழுத்து மாறிடும் என்று சொன்ன அதற்கு சிட்டி நீ வேலைக்கு போனா இன்னும் 30 ஆயிரம் 40 ஆயிரம் சம்பாதிப்பியா அதைவிட டபுள் மடங்கா நான் தரேன் என்கிட்ட கணக்கு பாரு உன்னை ஒரு ரெண்டு மூணு மணி நேரம் வச்சிருந்து வெளியே விட்ருவேன் இந்த எக்ஸாமில் எழுதக்கூடாது அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் சத்யா கோபப்பட்டுக் கொண்டே இருக்க உனக்கு போதை ஊசி போட்டு அனுப்பிட்டு போலீஸ்க்கு கால் பண்ணி சொல்லிடுவேன் நீ என்னை விட கிரிமினல் ஆயிடுவ என்று மிரட்டி ஊசியை போட வருகிறார்.
சிட்டி ஊசி போட்டாரா?முத்து சத்யாவை காப்பாற்றினாரா? என்ன நடந்தது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
